சென்னை: கார் என்றாலே இளைஞர்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம். அதிலும் தற்போது நியூ மாடல் கார்களை, தொடர்ந்து கார் தயாரிக்கும் நிறுவனங்கள் அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரே பேமெண்ட் செய்து கார் வாங்கும் குடும்பங்களும் இருக்கின்றன. ஆனால், அவ்வாறு கார் வாங்க முடியாதவர்கள் லோன் பெற்று கார் வாங்குகின்றனர். கார் கடன் பெறுவது, தற்போது சுலபமானதாகிவிட்டது. ஆனால், அவ்வாறு நீங்கள் பெற்ற கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வட்டிச் செலவுகளை சேமிக்க முடியும். இங்கு கார் கடனை எளிதில் செலுத்தி முடிக்க உதவும் டிப்ஸ்களை பார்ப்போம்.
முன்பணம் செலுத்தி கடனை முடிக்க வேண்டும் எனும் பட்சத்தில் முதலில் நம் நினைவுக்கு வருவது வீட்டுக் கடன்கள் தான். வீட்டுக் கடனோ அல்லது கார் கடனோ எதுவாக இருந்தாலும், நீங்கள் தான் அதனை வட்டியுடன் செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கார் கடன் என்று வரும்போது முன்பணம் செலுத்துவதன் மூலம், உங்கள் கடனின் கால அளவு குறைவதோடு, நீங்கள் எளிதில் அந்த கடனிலிருந்து விடுபட முடியும். அதேபோல், அதிலிருந்து சேமிக்கும் வட்டி தொகையை வேறு ஏதேனும் முதலீட்டு திட்டங்களில், நீங்கள் முதலீடு செய்யலாம் அது பிற்காலத்தில் உங்களுக்கு உதவும் வகையில் இருக்கும்.

கார் கடனை முன்கூட்டியே செலுத்தி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான சில ஸ்மார்ட் டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
முன்கூட்டியே பணம் செலுத்தும் விதிமுறைகளைப் புரிந்து கொள்ளுங்கள்: உங்களுக்கு கார் கடன் வழங்கிய வங்கியோ அல்லது நிதி நிறுவனத்திடமோ சென்று முன்கூட்டியே பணம் செலுத்தும் விதிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். சில கடன் வழங்கும் நிறுவனங்கள், முன்கூட்டியே பணம் செலுத்தும் போது அபராதம் மற்றும் கட்டணங்களை விதிக்கின்றனர். குறிப்பாக, நீங்கள் கடன் காலத்தில், ஆரம்பத்திலேயே குறிப்பிடத்தக்க தொகையை செலுத்தினால், இது போன்ற விதிமுறைகளை அறிந்து கொள்வது சிறப்பானதாக இருக்கும்.
உங்கள் பட்ஜெட்டை தெரிந்து செயல்படுவது: சிலர் மாத சம்பளம் வாங்கக்கூடியவராக இருப்பார்கள். சிலர் சொந்த தொழில் செய்யும் நபராக இருப்பார்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுடைய கார் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு உங்களிடம் பணம் இருக்கிறதா.. என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். கார் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு முன்பு, அவசரகால சேமிப்புகள் மற்றும் பிற நிலுவையில் உள்ள கடன்கள் போன்ற காரணங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தும் போது உங்களின் மற்ற முக்கிய செலவு ஏதேனும் பாதிக்கிறதா.. என்பதைப் பற்றியும் ஆராயுங்கள்.
எதிர்பாரா பணம் வந்தால் அதனை திறம்பட நிர்வகிக்கவும்: பரம்பரைச் சொத்து ஏதேனும் விற்பனையாகும் சமயங்களில் அல்லது ஊழியர்களாக இருந்தால் அலுவலகங்களில் தரும் போனஸ்கள் போன்றவற்றை சேமித்து, உங்கள் கார் கடனை அடைப்பதற்கு உபயோகியுங்கள். இதனால், உங்களுக்கு வட்டிச் சுமை குறையலாம். மேலும் கடனை விரைவாகவும் செலுத்த உதவுகிறது.
ஓரளவு முன் பணம் செலுத்துதல்: கார் கடனை முடிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அனைத்து தொகையையும் செலுத்தி முடிப்பது என்பதல்ல. இதை முன்கூட்டியே செலுத்த முடியும் என்றால் ஒருவர் கடன் வாங்கும் நிலைக்கே தள்ளப்பட மாட்டார். எனவே, பகுதி பகுதியாக நீங்கள் தொகையை பிரித்து உங்கள் கார் கடனில் வரவு வைக்க முடியும். இது விரைவில் உங்கள் கடனை முடிக்க உதவுகிறது. மேலும் நீங்கள் எவ்வாறு கடனை அடைத்து முடித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு விரைவாக கடனை முடிக்க உதவுகிறது.
சேமிப்பு மற்றும் முதலீடு: நீங்கள் கார் கடனிலிருந்து சேமிக்கும் ஒரு பகுதியை மற்ற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் இதன் மூலம் நீங்கள் நிரந்தர வருமானத்தை பெற முடியும். PPF கணக்குகள், பிக்சட் டெபாசிட்கள் போன்றவற்றிற்கு வங்கிகள் அதிக வட்டி தருகிறது. இதில் ஏதேனும் முதலீடு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
கிரெடிட் ஸ்கோரைக் கவனித்தல்: சரியான நேரத்தில் கடனை முன்கூட்டியே செலுத்துவது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருங்கள், இதற்காக உங்கள் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையை அடிக்கடி கண்காணியுங்கள்.
லோன் ட்ரான்ஸ்ஃபர்: உங்களுக்கு கார் கடன் வழங்கிய வங்கி அதிக வட்டியை வசூலிக்கிறது என்பது தெரிய வந்தால், நீங்கள் இந்தக் கடனை பிற வங்கிகளுக்கு மாற்றுவது குறித்து யோசிக்கலாம். ஆனால், குறைந்தது 0.5 % முதல் ஒரு 1 சதவீத வட்டி விகிதத்தில் வித்தியாசம் இருந்தால் மட்டுமே லோன் ட்ரான்ஸ்ஃபர் பற்றி யோசிக்கவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications