நிதி சுதந்திரம் என்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. அதற்கு உதவும் வகையில் தற்போது தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகளுக்கு ரூ. 1000 வழங்கி வருகிறது. இந்த 1000 ரூபாய் தொகை சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால், இந்த சிறிய தொகையும் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இந்தப் பதிவில் ரூ.1000 மகளிர் உதவித் தொகையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் தற்போது இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் தரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதை வைத்து பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சுயமரியாதையோடு வாழ பயன்படுத்த முடியும். இந்த தொகையை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
வங்கிக் கணக்கில் சேமிக்கலாம்: ரூ.1000-த்தை வங்கிக் கணக்கில் அப்படியே எடுக்காமல் சேமிப்பது முதலில் செய்யக்கூடிய விஷயம். இது எதிர்கால தேவைகளுக்கு ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும்.
இதைத்தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால் சில மாதங்களுக்கு பின்னர் பெரிய தொகையாக இருக்கும். மகளிர் உதவித் தொகை தருவதற்கு முன்பும் செலவுகள் செய்து கொண்டுதான் இருந்தீர்கள். எனவே இந்த தொகையை முழுதும் நம்பி செலவு செய்யும் எண்ணத்தை தவிர்த்தால் கண்டிப்பாக வங்கி கணக்கில் இந்தத் தொகையை சேமித்து வைக்க முடியும்.
நிதி திட்டமிடல்: இந்த தொகையை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொண்டு, எதிர்கால இலக்குகளுக்கான நிதி திட்டமிடலைத் தொடங்கலாம். குழந்தைகளின் கல்வி, திருமணம், சொந்த வீடு வாங்குதல் போன்ற பெரிய இலக்குகளை மனதில் கொண்டு, சிறு தொகையாக தொடங்கி, முதலீடு செய்யலாம்.
தொழில் தொடங்கலாம்: ரூ.1000 தொகையை வைத்து சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழிலைத் தொடங்கலாம். உதாரணமாக இட்லி பொடி வியாபாரம், இட்லி மாவு வியாபாரம் என வீட்டில் இருந்தே செய்யலாம். ஒரு வேலை உங்கள் தொழிலில் முன்னேற்றம் தென்பட்டால், அதன் பிறகு இரண்டு, மூன்று மாதங்கள் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து முதலீடு செய்து தொழிலை விரிவு படுத்தலாம்.
கடன் அடைக்கலாம்: ஏற்கனவே இருக்கும் கடன்களை அடைக்க, இந்த தொகையைப் பயன்படுத்தலாம். சிலர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு EMI-யில் வாங்கி இருப்பார்கள். இது போன்ற தொகையை வைத்து EMI தொகையுடன் சேர்ந்து இந்த தொகையையும் கட்டி கடனை சீக்கிரம் முடிக்கலாம். அப்படியானால் வட்டி குறையும் நீண்ட நாட்களுக்கு கட்டவேண்டிய EMI-ஐ குறுகிய காலத்திற்குள் அடைத்து முடித்து விடலாம்.
திறன் மேம்பாடு: இல்லத்தரசிகள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள நினைத்துக் கொண்டிருந்தால் அதற்கு இந்த தொகையை பயன்படுத்தலாம். சிலருக்கு டைலரிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சிலருக்கு ஆரி எம்பிராய்டரி வகுப்புகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதுபோன்ற விஷயங்களுக்காக இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம்.
உடல்நல பரிசோதனை: நாளும் உழைத்து குடும்பத்திற்காக பாடுபடும் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். எனவே ஒரு நல்ல மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஊட்டச்சத்து பொருட்கள்: ஆரோக்கியமான உணவு என்பது நல்ல உடல் நலத்திற்கு அடிப்படையான ஒரு விஷயம். இந்தத் தொகையைப் பயன்படுத்தி மாதமாதம் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
தமிழக அரசின் மகளிர் உதவித் தொகை திட்டம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குகிறது. இந்தத் தொகையை மேற்கண்ட முறைகளில் பயன்படுத்தி, பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications