நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வங்கிகளில் சேமிப்பு வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.
நாம் செய்யும் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதோடு வட்டி விகிதமும் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகம்.
ஆனால் எந்த வங்கியில் என்ன வட்டி விகிதம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அந்த வகையில் இன்று 10 வங்கிகளின் சிறந்த வட்டி விகிதத்தினை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
வட்டி விகிதம் எவ்வளவு?
பொதுவாக வங்கி கணக்குகள் சம்பளம், முதலீடு, இஎம்ஐ என அனைத்தையும் வங்கி பரிமாற்றம் மூலமே செய்கிறோம். இவை அனைத்தும் நமது சேமிப்பு கணக்கு மூலமே நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் அதில் சிலர் மட்டும் சேமிப்பு கணக்குகள் இருக்கும் நிதிக்கு என்ன வட்டி விகிதம் என்பதை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வட்டி விகிதம் குறைவு
சில சேமிப்பு கணக்குகளில் உள்ள பணம் பெயரளவு வட்டி விகிதத்தினை பெறுகிறது. சில வங்கிகளில் இது மிக குறைவாகவும், சில வங்கிகள் அதிகமாகவும் வட்டி விகிதத்தினை செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் அவரவர் வங்கிகளுக்கு நிதியினை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிறது. எனினும் சில வங்கிகள் வட்டி விகிதத்தினை மிக குறைவாகவே கொடுக்கின்றன.
எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?
ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்கில் (AU small finance bank) வட்டி விகிதம் 4 - 7% வரை கொடுக்கப்படுகிறது. இதில் மினிமம் பேலன்ஸ் இருப்பு தொகை 2000 - 5000 ரூபாய் வரையில் உள்ளது.
இதே பந்தன் வங்கியில் 4 - 7.15% வரை வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் 5000 ரூபாயாகும்.
டிசிபி வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி
டிசிபி வங்கியில் வட்டி விகிதம் 3.25 - 5.5% ஆகும். இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் 5000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியில் 6 - 7% வரையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் 10,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
லட்சுமி விலாஸ் & இந்தஸ்இந்த் வங்கி
லட்சுமி விலாஸ் வங்கியினை பொறுத்தவரையில் வட்டி விகிதம் 3.25 - 6% வரையில் கொடுக்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் வெறும் 500 - 1000 ரூபாய் தான்.
இந்தஸ்இந்த் வங்கியிலும் வட்டி விகிதம் 4 -6% தான். இந்த வங்கியிலும் மினிமம் பேலன்ஸ் தொகையானது 1500- 2500 ரூபாயாகும்.
ஆர்பிஎல் பேங்க் & சவுத் இந்தியன் வங்கி
ஆர்பிஎல் பேங்கினை பொறுத்த வரையில் 5 - 6.75% தான் வட்டி விகிதமான சேமிப்பு கணக்கில் உள்ள இருப்புகளுக்கு கொடுக்கப்படுகிறது. அதோடு அவ்வங்கியில் மினிமம் பேலன்ஸ் 2500 - 5000 ரூபாயாகும்.
இதே சவுத் இந்தியன் வங்கியில் 2.35 - 4.6% வட்டி விகிதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மினிமம் பேலன்ஸ் 1000 - 2500 ரூபாயாகும்.
யெஸ் பேங்க் மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
யெஸ் பேங்கில் வட்டி விகிதம் 4 - 6% ஆகும். ஆனால் யெஸ் வங்கியில் மினிமம் பேலன்ஸ் என்பது 10,000 ரூபாயாகும்.
இதே உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அதே நேரம் சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி விகிதம் 4 - 6.5% கொடுக்கிறது.
இதனையும் கவனிங்க
ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் பெரிய பெரிய வங்கிகள், அரசு பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் கூட வைப்புத் தொகைக்கு வட்டி விகிதங்களை குறைவாகத்தான் வழங்குகின்றன. உதாரணத்திற்கு எஸ்பிஐ 2.70% வட்டியையும், இதே ஹெச்டிஎஃப்சி வங்கி 3 - 3.5% வட்டி விகிதத்தினையும் வழங்கி வருகின்றன. ஆனால் சில வங்கிகளில் ஏடிஎம் சேவை, பரந்த பாதுகாப்பு என அனைத்தினையும் ஆராய்ந்து அதன் பின்பு உங்களுக்கு வசதியான ஒரு வங்கியில் பணத்தினை போட்டு வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications