தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
இதில் ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகின்றன.
இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் இறையாண்மை தன்மை கொண்ட முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எப்போது தொடக்கம்?
நடப்பு ஆண்டின் முதல் தங்க பத்திர விற்பனையானது இது, விழாக்கால பருவத்தில் வருவதால், முதலீட்டுக்கு மிக சிறந்த நேரமாகவும் பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் 9 சீரீஸ் ஆன இது ஜனவரி 10, 2022 அன்று தொடங்கவுள்ளது. ஜனவரி 14 அன்று முடிவடையவுள்ளது. 5 நாட்கள் இந்த பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம்.
விலை எவ்வளவு?
ஒரு கிராம் தங்கம் விலை 4,786 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது அதிகம். அதிலும் தற்போது டிஜிட்டல் தங்கத்தின் மீதும் ஆர்வம் கூடிக் கொண்டே செல்கிறது. ஆக தங்கம் பத்திரங்கள் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்கலாம்
தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் மூன்றாவது அலை குறித்தான அச்சம் எழுந்துள்ளது. மேலும் உருமாற்றம் அடைந்து பரவி வரும் கொரோனாவின் தாக்கம் என்பது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகின்றதோ? என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு மாற்று
பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக இந்த டிஜிட்டல் தங்க பத்திரங்கள் அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக பிசிகல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என்ற செலவினங்கள் உள்ளன. அதோடு பாதுகாப்பு குறித்தான பிரச்சனையும் உள்ளது. இவற்றோடு தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓன்றாக உள்ளது. இதனால் தான் பிசிகல் தங்கமாக அல்லாமல், டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கவர்ச்சிகரமான முதலீடு
ஆரம்பத்தில் தங்க பத்திர திட்டம் பிசிகல் தங்கத்தின் தேவையினை குறைக்கும் பொருட்டு, ஒரு திட்டமாகத் தான் இருந்தது. ஆனால் தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
எவ்வளவு வாங்கலாம்?
பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும்.
எங்கு வாங்கலாம்?
இந்த தங்க பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு வாங்க உங்கள் டீமேட் கணக்கு தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.
ஆன்லைனில் வாங்கலாம்
அங்கு டிஜிட்டல் வங்கி மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த தங்க பத்திரங்களை நாம் ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இவ்வாறு ஆன்லைன் மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையும் கிடைக்கும். அவ்வாறு ஆன்லைன் மூலமாக வாங்குபவர்கள்9ம் கட்ட வெளியீட்டில் 4,736 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
கடன் பெறலாம்
பிசிகல் தங்கத்தினை போன்றே இந்த தங்க பத்திரங்களையும் பிணையமாக வைத்து கடன் பெறலாம். இந்த தங்க பத்திர திட்டத்திற்கு 8 ஆண்டுகள் பதவிக்காலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. பிசிகல் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினையும் பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி உண்டு
இந்த தங்க பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை.
வரி சலுகை உண்டா?
கேபிட்டல் டேக்ஸ் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால் முன் கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் கேபிட்டல் டேக்ஸ் உண்டு.
பிசிகல் தங்கமாக கிடைக்குமா?
பொதுவாக பலருக்கு இருக்கும் ஒரு சந்தேகம் இது. இந்த தங்க பத்திரங்களுக்கு பதிலாக தங்கமாக வாங்கிக் கொள்ள முடியுமா என்று? இந்த தங்க பத்திரம் பிசிகல் தங்கத்தினை குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இது முதலீட்டு நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். ஆக இந்த திட்டத்தில் நாம் பிசிகல் கோல்டாக பெற முடியாது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications