வங்கி சேமிப்பு என்பது நம் மக்களின் சேமிப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் முதலீடாக பார்க்கப்படுகிறது.
அதிலும் மூத்த குடிமக்களுக்கு இது மிக பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.
ஏன் இன்று பலரின் அடிப்படை ஆதாரமே இதுவாகத் தான் உள்ளது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டினை ஆராய்ந்து, மிகவும் பாதுகாப்பான ஒன்றில் முதலீடு செய்வது தானே நல்ல விஷயம்.
எந்தெந்த வங்கி
அந்த வகையில் சில வங்கிகளில் உள்ள மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்பு நிதி திட்டங்களையும், அதற்கான வட்டி விகிதத்தினையும் தான் இன்று நாம் பார்க்க விருக்கிறோம். இன்று நாம் பார்க்க விருக்கும் வங்கிகள், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கிகளில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டங்கள் தான்.
SBI special FD scheme for senior citizens
எஸ்பிஐ வீ கேர் என்று அழைக்கப்படும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டம், மே 12, 2020 முதல் உள்ளது. மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ -யின் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.
5 வருடங்கள் மற்றும் அதற்கு கூடுதலான கால அளவு உள்ள கால வைப்பு தொகைகளுக்கு, சாதாரண மக்களுக்கு பொருந்தும் விகிதத்தை விட மூத்த குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டியை எஸ்பிஐ வழங்கும்.
இதுபோன்ற வைப்புகளை முதிர்வு காலத்துக்கு முன்கூட்டியே திரும்பப் பெற்றால் இந்த கூடுதல் வட்டி செலுத்தப்படாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய்க்குள் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
HDFC Bank special FD scheme for senior citizens
ஹெச்டிஎஃப்சி சீனியர் சிட்டிசன்ஸ் கேர் என்று அழைக்கப்படும், மூத்த குடிமக்களூக்கான வைப்பு நிதி திட்டத்தினை, 18 மே, 2020 அறிமுகப்படுத்தியது இந்த வங்கி. இதன் காலம் ஐந்து ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
இது சாதரண மக்களுக்கான வட்டி விகிதத்தினைவிட 75 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
மூத்த குடிமக்கள் ஹெச்டிஎஃப்சி சீனியர் சிட்டிசன்ஸ் கேர் திட்டத்தின் கீழ் வைப்பு தொகையினை வைத்திருந்தால், 6.25% வட்டி விகிதம் இருக்கும். மூத்த குடிமக்களுக்கு 25 அடிப்படை புள்ளிகள் பிரிமீயமும் கிடைக்கும். இது ஜூன் 12 முதல் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் முதலீடு என்பது அதிகபட்சம் 2 கோடி ரூபாய்க்கு குறைவாக இருக்கலாம். நீங்கள் டெபாசிட் தொகையை 5 வருடத்துக்கு பிறகு எடுத்தால் 1.25% அபராதம் விதிக்கப்படும்.
ICICI Bank special FD scheme for senior citizens
ஐசிஐசிஐ வங்கி கோல்டன் இயர்ஸ் என அழைக்கப்படும் இது ஐசிஐசிஐ மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வைப்பு நிதி திட்டமாகும். இது 20 மே, 2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் காலம் 5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம், இது சாதரண மக்களுக்கான வட்டி விகிதத்தினைவிட 80 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
வட்டி விகிதம்: ஐசிஐசிஐ வங்கி கோல்டன் இயர்ஸ் திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் வருடத்துக்கு 6.30% ஆகும்.
இது 5 வருடம் 1 நாளுக்கு முன்பு பணத்தினை எடுத்தால் 1% அபராதம் விதிக்கப்படும். இதே 5 வருடம் 1 நாளுக்கு பின்பு எடுத்தால் 1.30% அபராதம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் 2 கோடி ரூபாய்க்குள் முதலீடு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications