வரியை சேமிப்பதற்கும், பிள்ளைகளின் எதிர்கால படிப்பு மற்றும் திருமணத்துக்காகவும், மூத்த குடிமக்கள் அதிக வட்டியைப் பெறுவதற்கும் வங்கிகள் பிக்சட் டெபாசிட் சிறந்த வழியாகும். சில சமயங்களில் கூடுதல் வட்டியை வழங்கும் சிறப்பு திட்டங்களையும் வங்கிகள் அறிவிக்கும்.
அதுபோன்று மூன்று முக்கிய வங்கிகள் அறிவித்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் 2023 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த வாய்ப்பை முதலீட்டாளர்கள் தவறவிடாமல் இருப்பது புத்திசாலித்தனமாகும்.

இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, ஐடிபிஐ, இந்தியன் வங்கி ஆகியவை அறிவித்த இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
இதற்கு முன்பும் வங்கிகள் இதுபோன்ற சிறப்பு திட்டங்களை குறிப்பிட்டக் காலத்துக்கு மூத்த குடிமக்களுக்காகவும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்காகவும் அறிவித்ததுண்டு. இருப்பினும் பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து இந்தக் காலக்கெடுவை அவ்வப்போது மாற்றுவது உண்டு.
தற்போது எஸ்பிஐ-யின் அம்ரித் காலாஷ் (400 நாட்கள்) திட்டம், ஐடிபிஐ-யின் உத்சவ் பிக்சட் டெபாசிட் திட்டம், இந்தியன் வங்கியின் இந்த் சூப்பர் 400 நாட்கள் திட்டம் ஆகியவை முடிவடைகின்றன.
எஸ்பிஐ-யின் அம்ரித் காலாஷ் (400 நாட்கள்) திட்டம்: இத்திட்டத்தில் முதலீடு செய்யக் கடைசி நாள் 2023 டிசம்பர் 31. இந்தத் திட்டத்தில் பல்வேறு சலுகைகள் உள்ளன. 400 நாள் முதிர்ச்சி திட்டமான இதற்கு மூத்த குடிமக்களுக்கு கவர்ச்சிகரமான 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவரவருக்குப் பொருந்தும் பிரிவுக்கு ஏற்ப கூடுதல் வட்டியை எஸ்பிஐ வழங்குகிறது.
ஐடிபிஐ-யின் உத்சவ் பிக்சட் டெபாசிட் திட்டம்: ஐடிபிஐ வங்கியின் பண்டிகைக்கால உத்சவ் பிக்சட் டெபாசிட் திட்டம் 375 நாட்கள் மற்றும் 444 நாட்கள் என இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 375 நாள் திட்டத்துக்கு பொதுமக்கள், என்ஆர்இ, என்ஆர்ஓ ஆகியோருக்கு 7.10 சதவீதம் வட்டி அளிக்கிறது.
என்ஆர்இ என்றால் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சம்பாதித்து அன்னிய கரன்சிகள் மூலம் இயக்கப்படும் வங்கிக் கணக்குகளாகும். ஆனால் என்ஆர்ஓ என்பது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சம்பாதிக்கும் இரு கரன்சிகளையும் இதில் பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு 7.1 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.
444 நாட்கள் திட்டத்துக்கு பொதுமக்கள், என்ஆர்இ, என்ஆர்ஓ மக்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி வழங்குகிறது.
இந்தியன் வங்கியின் இந்த் சூப்பர் 400 நாட்கள் திட்டம்: இந்தியன் வங்கியின் இந்த சிறப்பு டெர்ம் டெபாசிட் திட்டமான இந்த் சூப்பர் 400 நாட்கள் திட்டத்துக்கு பிக்சட் முதிர்ச்சிக் காலமாக 400 நாட்களுக்கு அதிக வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000மும் அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு கீழும் முதலீடு செய்யலாம்.3.11.2023 முதல் 31.12.2023 வரை பொதுமக்களுக்கு 7.25 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், சூப்பர் சீனியர் குடிமகன்களுக்கு 8 சதவீதமும் ஆண்டு வட்டியாக அளிக்கப்படும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications