நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், குழந்தைகளுக்கான வருங்கால நலனைக் கருதி சிறப்பான மணி பேக் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க நினைக்கும் எவரும், இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். எல்ஐசியின் இந்த மணி பாலிசி திட்டம் (LIC news children's money back plan) பற்றிய முழு அம்சங்களையும் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
யாரெல்லாம் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம், ஆன்லைனில் எடுத்துக் கொள்ளலாமா? ஆஃப்லைனில் தான் எடுக்க வேண்டுமா? எப்படி இந்த பாலிசியில் இணைவது? வாருங்கள் பார்க்கலாம்.
எத்தனை வயது இருக்க வேண்டும்?
குழந்தைகளுக்கான இந்த காப்பீட்டினை பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 0 ஆகும். அதிகபட்ச வயது 12 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச பாலிசி தொகை 10,000 ரூபாயாகும். ஆனால் காப்பீட்டிற்கான அதிகபட்ச தொகை என்ற வரம்பு ஏதும் இல்லை. குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான உடன் 20 சதவீதம் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தைகளின் எதிர்காலம்
பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர், முறையே பாலிசியின் 20 சதவீத தொகையை பெறலாம். இது தவிர நீங்கள் பாலிசி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி சொல்லவேண்டுமானால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும். LIC-யின் இந்த புதிய குழந்தைகள் மணி பேக் பாலிசி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் எவ்வளவு?
இந்த பாலிசியில் முதல் ஆண்டு பிரீமியம் - ஆண்டு ஒன்றுக்கு பிரிமீயம் 55239 ரூபாய் (ரூ.52860 + ரூ.2379 ஜிஎஸ்டியுடன்) என கணக்கிடப்பட்டுள்ளது. இதே அரையாண்டு பிரீமியம் 27917 (ரூ.26715 + ரூ.1202 ஜிஎஸ்டியுடன்) ரூபாய் எனவும், இதே காலாண்டு பிரிமியம் 14108 ரூபாய் (ரூ.13500 + ரூ.608 ஜிஎஸ்டியுடன்), இதுவே மாத பிரீமியம் 4703 ரூபாயாகும் (ரூ.4500 + ரூ.203 ஜிஎஸ்டியுடன்). இதே நாள் ஒன்றுக்கு 151 ரூபாயாகும் கட்டவேண்டியிருக்கும்.
க்ளைம் பெனிபிட்
இந்த திட்டத்தில் பிரிமீயம் வேவர் பெனிபிட் ரைடர் ஆப்ஷன் உள்ளது. இந்த பாலிசியின் டெர்ம் 25 ஆண்டுகள் ஆகும். உதாரணத்திற்கு உங்களது குழந்தைக்கு 5 வயது எனில், உங்களது பாலிசி டெர்ம் 18 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை பொறுத்த வரையில் க்ளைம் பெனிபிட் என்பது உங்களது பிரீமியம் செலுத்தும் தொகையை பொறுத்து இருக்கும். மற்ற விவரங்களை https://www.licindia.in/Products/Insurance-Plan/LIC-s-NEW-CHILDREN-S-MONEY-BACK-PLAN-(2) என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications