SSY: சுகன்யா சம்ரிதி யோஜனா.. 21 வயதில் ரூ.41 லட்சம் வேண்டுமா.. இது தான் பெஸ்ட்!

Sukanya Samriddhi yojana: மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக திட்டங்கள் பொதுவாகவே கவர்ச்சிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் ஓரளவுக்கு வருமானம் தரக்கூடியதாக இருந்து வரும் நிலையில், சந்தை அபாயமும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சலகத்தின் கீழ் வழங்கப்படும் திட்டமாகும். இந்த திட்டங்களில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு வட்டி விகிதம் 8% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிறந்த குழந்தை முதல் தொடங்கிக் கொள்ளலாம். இதனை 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரையில் தொடங்கிக் கொள்ளலாம்.

SSY: சுகன்யா சம்ரிதி யோஜனா.. 21 வயதில் ரூ.41 லட்சம் வேண்டுமா.. இது தான் பெஸ்ட்!

இந்த கணக்கு 18 வயதிற்கு மேல் உங்கள் பெண் குழந்தைக்கு திருமணம் ஆகும் போது தானாகவே முடித்துக் கொள்ளலாம். அப்படி இல்லை எனில் 21 வயதாகும்போது தானாக முதிர்வடையும்.

இந்த திட்டத்தில் 7.6% வருமானம் கிடைப்பதால் கருத்தில் கொண்டால், மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வதாக கொள்வேம். வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

இதில் 80சி-யின் கீழ் வரிச் சலுகையும் கிடைக்கும். ஆக மொத்தம் ஒரு பெண் குழந்தை 21 வயதாகும் வரையில் இந்த திட்டத்தினை சரியாக தொடரும்பட்சத்தில் வட்டி வருவாயாக 41,15,155 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் முதிர்வு தொகையாக 63,65,155 ரூபாயாகவும் கிடைக்கும். இதே இதில் 8% எனும் போது இன்னுக் வருமானம் கூடுதலாக கிடைக்கும்.

இதில் வரிச்சலுகையாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.

அதேபோல இந்த சேமிப்பு திட்டத்திற்கான முதலீட்டு தொகையினை ஒரே தவணையாகவோ அல்லது காலாண்டு ஒரு முறையோ? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்திக் கொள்ளலாம்.

பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், அந்த 10 வகுப்பு முடிக்கும்போது கல்வி செலவினங்களுக்காக, நிலுவையில் 50% தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி இல்லையெனில் இந்த கணக்கினை தொடங்கப்பட்ட 5 ஆண்டுகள் கழித்து முடித்துக் கொள்ளலாம். எனினும் அக்கவுண்ட் ஹோல்டர் ஆபத்தான நோய் அல்லது பாதுகாவர் இறந்து விட்டால் இந்த கணக்கினை இடையில் முடித்துக் கொள்ள முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+