தனிநபர் நிதி பழக்கம் குறித்து உலகளவில் பல ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளது, பல ஆய்வாளர்கள் இத்தகைய பரிசோதனை மூலம் மக்களின் செலவின போக்கை கண்டுப்பிடித்து அதற்கு ஏற்ப கொள்கைகள், முதலீட்டு திட்டங்கள் உருவாக்குவதும், நிறுவனங்கள் அதை அடிப்படையாக வைத்து பிஸ்னஸை மேம்படுத்தும் வியூகமும் உருவாக்குவது வழக்கம்.
இப்படி அமெரிக்காவில் செய்பப்பட்ட ஸ்டான்ஃபோர்டு மார்ஷ்மெல்லோ பரிசோதனை இன்றளவும் பேசுப்படும் முக்கியமான ஒரு எக்ஸ்பிரிமெண்ட் ஆக பார்க்கப்படுகிறது. இப்படி இதுல என்ன இருக்கு..? மிடில் கிளாஸ் மக்கள் முதல் பெரும் பணக்கார்கள் வரையில் இந்த திட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்டான்ஃபோர்டு மார்ஷ்மெல்லோ பரிசோதனை (Stanford Marshmallow Experiment) என்பது 1960-களில் உளவியலாளர் வால்டர் மிஷெல் (Walter Mischel) தலைமையில் நடத்தப்பட்ட ஒரு பிரபலமான ஆய்வு ஆகும். இந்த சோதனை குழந்தைகளை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டவை.
குழந்தைகளின் self-control மற்றும் பொறுமையை (delayed gratification) புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இதுவும் முதலீட்டு பழக்கத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதை வால்டர் மிஷெல் ஆய்வின் முடிவில் தெரிவித்தார்.
இந்த பரிசோதனையில், 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு மார்ஷ்மெல்லோ கொடுக்கப்பட்டது. இதோடு ஒரு கண்டிஷனும் வைக்கப்பட்டது. "15 நிமிடங்களுக்கு மார்ஷ்மெல்லோவை சாப்பிடாமல் பொறுமையாக காத்திருந்தால், உங்களுக்கு கூடுதலாக ஒரு மார்ஷ்மெல்லோ கிடைக்கும்." ஆனால், அவர்கள் பொறுமையாக காத்திருக்கவில்லை என்றால், இரண்டாவது மார்ஷ்மெல்லோ கிடைக்காது.
சில குழந்தைகள் உடனடியாக மார்ஷ்மெல்லோவை சாப்பிட்டு விட்டனர், வெகு சிலர் மட்டும் பொறுமையாக காத்திருந்து இரண்டு மார்ஷ்மெல்லோக்களை பெற்றனர்.
பின்னர், இந்த சோதனையில் பங்குப்பெற்ற குழந்தைகளை பல ஆண்டுகள் வால்டர் மிஷெல் டீம் கண்காணித்து, பொறுமையாக காத்திருந்து 2வது மார்ஷ்மெல்லோ பெற்ற குழந்தைகள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை அடைவதாக (படிப்பு, வேலை, ஆரோக்கியம் போன்றவற்றில்) ஆய்வு கண்டறிந்தது. இது self-control மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
இதை முதலீட்டு பழக்கத்துடன் எப்படி ஒப்பிடலாம்?: ஸ்டான்ஃபோர்டு மார்ஷ்மெல்லோ பரிசோதனையை முதலீட்டு உலகில் நடைமுறை பழக்கங்களுடன் ஒப்பிடலாம். முதலீட்டில், குறுகிய கால லாபத்தை உடனடியாக பெறுவதற்கு பதிலாக, நீண்ட கால பலன்களை பொறுமையாக பெறுவது மூலம் அதிக லாபத்தை காம்பவுண்டிங் மூலம் பெறலாம் என்பதை தான் இந்த சோதனை உணர்த்துகிறது. இதற்கு சரியான உதாரணம் வாரன் பஃபெட்.
உதாரணம்: ரமேஷ் என்ற ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு 30 வயதாகிறது, மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் ஒரு புதிய ஐபோன் மொபைலை வாங்க 50,000 ரூபாய் செலவழிக்கலாமா அல்லது அதை முதலீடு செய்யலாமா என்று யோசிக்கிறார்.
மார்ஷ்மெல்லோவை உடனே சாப்பிடுவது போல (குறுகிய கால மகிழ்ச்சி):
ரமேஷ் மொபைலை வாங்க முடிவு செய்தால், அவர் உடனடியாக மகிழ்ச்சியை அனுபவிக்கிறார். ஆனால், அந்த 50,000 ரூபாய் அவருக்கு எதிர்காலத்தில் பெரிய பலனை தராது.
பொறுமையாக காத்திருப்பது போல (நீண்ட கால பலன்): ரமேஷ் அந்த 50,000 ரூபாயை ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடிவு செய்கிறார். ஒரு சராசரி ஆண்டு வட்டி விகிதம் 12% என்று வைத்துக் கொண்டால், அந்த 50,000 ரூபாய் 20 ஆண்டுகளில் சுமார் 4.8 லட்சம் ரூபாயாக வளரும் (கூட்டு வட்டியின் மூலம்). இதை அவர் ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தலாம் அல்லது பெரிய கனவுகளை (வீடு வாங்குதல், குழந்தைகளின் படிப்பு) நிறைவேற்றலாம்.
முதலீட்டு பழக்கத்தில் பொறுமையின் முக்கியத்துவம்: மார்ஷ்மெல்லோ பரிசோதனையைப் போலவே, முதலீட்டிலும் பொறுமை மற்றும் self-control முக்கிய பங்கு வகிக்கின்றன. பலர் உடனடி லாபத்தை எதிர்பார்த்து, அதிக ஆபத்துள்ள பங்குகளில் முதலீடு செய்து இழப்பை சந்திக்கின்றனர். ஆனால், பொறுமையாக முதலீடு செய்பவர்கள், குறிப்பாக கூட்டு வட்டி (compound interest) மூலம் நீண்ட காலத்தில் பெரிய பலனை அடைகின்றனர்.
2வது உதாரணம்: லட்சுமி என்ற பெண் மாதம் 5,000 ரூபாயை ஒரு SIP (Systematic Investment Plan) மூலம் முதலீடு செய்கிறார். அவர் 25 வயதில் தொடங்கி, 12% சராசரி வட்டியுடன் 35 ஆண்டுகள் முதலீடு செய்கிறார். அவர் மொத்தம் 21 லட்சம் ரூபாய் (5,000 x 12 x 35) முதலீடு செய்தாலும், 60 வயதில் அவருக்கு சுமார் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், அவர் அதே பணத்தை செலவழித்து, உடனடியாக கிடைக்கும் கிக் அல்லது மகிழ்ச்சியை தேடியிருந்தால், இந்த பெரிய தொகையை இழந்திருப்பார்.
ஸ்டான்ஃபோர்டு மார்ஷ்மெல்லோ பரிசோதனை நமக்கு ஒரு முக்கிய பாடத்தை கற்று தருகிறது: பொறுமை மற்றும் self-control நமது வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை தரும். முதலீட்டு உலகில், உடனடி லாபத்தை தேடுவதை விட, நீண்ட கால பலன்களை எதிர்பார்த்து முதலீடு செய்வது சிறந்தது.
ரமேஷ் மற்றும் லட்சுமியின் உதாரணங்கள், பொறுமையாக இருப்பது எப்படி எதிர்காலத்தில் பெரிய பலனை தருகிறது என்பதை காட்டுகின்றன. எனவே, ஒரு மார்ஷ்மெல்லோவை உடனே சாப்பிடுவதற்கு பதிலாக, இரண்டாவதற்காக காத்திருப்பது போல, முதலீட்டிலும் பொறுமையாக இருப்பது வெற்றியை தரும். இப்போ சொல்லுங்க நீங்க சுட்ட பழமா (ஒரு மார்ஷ்மெல்லோ சாப்பிட்ட குழந்தை), சுடாத பழமா (2 மார்ஷ்மெல்லோ பெற்ற குழந்தை)..?
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications