நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பல அதிரடியான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவித்து வருகின்றது.
குறிப்பாக அதன் சில்லறை வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில், பல அதிரடியான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.
ஏற்கனவே இவ்வங்கி அதன் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணத்தினை முழுவதும் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது.
கார் லோனில் என்ன சலுகை
இந்த நிலையில் தற்போது கார் லோன் மற்றும் நகைக் கடன் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது. குறிப்பாக கார் லோனில் ஆன் தி ரோடு விலையில் 90% கார் கடனாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதே சில்லறை வாடிக்கையாளர்களுக்கு Platinum Term Deposits என்ற திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
யோனோ மூலம் விண்ணப்பித்தால் சலுகை
கார் லோனுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் யோனோ மூலம் விண்ணப்பித்தால், கூடுதலாக 25 அடிப்படை புள்ளிகள் வட்டியில் சலுகை அளிக்கப்படும். யோனோ மூலம் விண்ணப்பிக்கும்போது வருடத்திற்கு 7.5% வட்டி விகிதம் இருக்கும். எனினும் இந்த விகிதமானது உங்களது சிபில் ஸ்கோரினை பொறுத்து வேறுபடலாம்.
அதிக வட்டி கொடுக்கும் பிளாட்டினம் டெர்ம் டெபாசிட்
எஸ்பியை வங்கியின் இந்த பிளாட்டினம் டெர்ம் டெபாசிட் திட்டமானது, 14,செப்டம்பர் 2021 வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் உள்ளன. இதில் பிளாட்டினம் 75 நாட்கள், பிளாட்டினம் 525 நாட்கள், பிளாட்டினம் 2250 நாட்கள் என மூன்று அம்சங்கள் உள்ளன.
வட்டி சலுகை
இதில் என்ஆர்இ டெபாசிட்களுக்கான தகுதிக்காலம் 525 நாட்கள் மற்றும் 2250 நாட்கள் மட்டுமே. வட்டி விகிதம் 75 நாட்கள் - 3.95%, 75 வாரங்கள் - 5.10%, 75 மாதங்கள் - 5.55%. ஆக நீண்டகாலத்திற்கு டெபாசிட் செய்யும்போது வடி விகிதம் அதிகமாகும். வட்டி விகிதத்தினை டேர்ம் டெபாசிட்டுக்கு மாதாந்திர அல்லது காலாண்டு வைப்புத்தொகையில் மட்டுமே பெற முடியும். இதே சிறப்பு டேர்ம் டெபாசிட் முதிர்வின் போது கிடைக்கும். வட்டி, டிடிஎஸ், வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கோல்டு லோனில் என்ன சலுகை?
நகை கடன் வாங்குபவர்களுக்கு நகைக்கடனில் 75 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதோடு வங்கி செயல்பாட்டு கட்டணத்தினையும் யோனோ ஆப் வழியாக விண்ணப்பித்தால் முழுமையாக தள்ளுபடி என அறிவித்துள்ளது.
Array
இது தவிர எஸ்பிஐ வங்கி பர்சனல் லோன் மற்றும் பென்ஷன் லோனுக்கும் செயல்பாட்டு கட்டணத்தினை முழுமையாக ரத்து செய்துள்ளது. வட்டியில் 50 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் பணிபுரியும் ஹெல்த்கேர் ஊழியர்களுக்கு இந்த சலுகையானது பயனுள்ளதாக இருக்கும் என அறிவித்துள்ளது. கூடுதலாக இந்த சலுகையானது கார் மற்றும் நகைக் கடனுக்கும் வரலாம் என்றும் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பயன்
இந்த சலுகையினை அறிவிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கலாம். இது பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என இவ்வங்கியின் தலைவர் சிஎஸ் செட்டி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications