எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. இதோ மீண்டும் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை, அதாவது ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்தது.

இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டி விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகளை குறைத்தது. இந்த நிலையில் கடன்களுக்கான வட்டி விகிதம் அப்போது குறைக்கப்பட்டது.

வட்டி விகிதம் குறைப்பு

வட்டி விகிதம் குறைப்பு

இந்த நிலையில் தற்போது மீண்டும் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 35 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. சரி அதென்னா MCLR விகிதம்? இந்த எம்சிஎல்ஆர் விகிதத்தினை பொறுத்தே வீட்டுக் கடன், வாகன கடன், அடமானக் கடன், தனிநபர் கடன் எனப் பல கடனுக்கான வட்டி விகிதங்களும் மாறுபடும்.

வட்டி விகிதம் குறையும்

வட்டி விகிதம் குறையும்

இவ்வாறு வட்டிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் கடன்களுக்கான இஎம்ஐ விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே MCLR விகிதம் கடந்த வாரத்தில் 75 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ள நிலையில், தற்போது 35 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் என அனைத்துக்கு வட்டி விகிதம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் குறைப்பு

வட்டி விகிதம் குறைப்பு

இந்த வட்டி குறைப்பினால், ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதமானது 7.75%ல் இருந்து 7.40% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதமானது ஏப்ரல் 10 முதல் செயல்பாட்டு வரும் என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக தகுதியான வீட்டுக் கடன் வழக்குகளில் இஎம்ஐ 30 ஆண்டு கடனில் லட்சத்திற்கு 24 ரூபாய் மலிவாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

இதில் ஓவர் நைட் விகிதம் 7.45%ல் இருந்து 7.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே ஒரு மாத கடனுக்கான வட்டி விகிதமும் 7.45%ல் இருந்து 7.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே மூன்று மாத கடனுக்கான விகிதம் 7.50%;ல் இருந்து 7.15% ஆகவும், இதே 6 மாத விகிதம் 7.7%ல் இருந்து 7.35% ஆகவும், ஒரு வருடத்திற்கான கடன் விகிதம் 7.75%ள் இருந்து 7.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இரு வருடங்களுக்கான வட்டி விகிதம் 7.95%ள் இருந்து 7.60% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதே மூன்று வருடங்களுக்கான வட்டி விகிதம் 8.05%ல் இருந்து 7.7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சேமிப்புக்கான வட்டியும் குறைப்பு

சேமிப்புக்கான வட்டியும் குறைப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வங்கியில் சேமிப்பு கணக்கில் ஒர் லட்சம் ரூபாய் வரை வைத்திருக்கும் டெபாசிட் தொகைக்கு, வட்டி விகிதத்தை 3%ல் இருந்து 2.75% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய விகிதமானது ஏப்ரல் 15ல் இருந்து அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+