எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அலர்ட்டா இருங்க.. வட்டி விகிதம் உயர்வு...!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளார்களுக்கு சற்றே அதிருப்தியை கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.

அப்படி என்ன அறிவிப்பினை கொடுத்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு? வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்தாலோ அல்லது குறைத்தாலோ, அதன் எதிரொலியாக வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தில் மாற்றத்தினை செய்யும். ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு அப்படி ஏதும் நிகழ்வில்லை.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

இதற்கிடையில் தான் நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது பேஸ் ரேட் விகிதத்தினை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதெல்லாம் இந்த வட்டி அதிகரிப்பினால் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன பாதிப்பு? ஏன் இந்த அச்சம் வாருங்கள் பார்க்கலாம்.

எப்போது அமல்

எப்போது அமல்

எஸ்பிஐயின் இந்த வட்டி அதிகரிப்பானது கடந்த டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அதிகரிப்பானது அதன் இணையதள அறிக்கையின் படி, 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இவ்வங்கி 5 அடிப்படை புள்ளிகளை குறைந்து, 7.45% வட்டி வீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரெபோவில் மாற்றமில்லை

ரெபோவில் மாற்றமில்லை

கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தில் ஓராண்டுகளுக்கும் மேலாக மாற்றம் செய்யவில்லை. இதன் காரணமாக இதுவரையில் வங்கிகள் வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றம் செய்யவில்லை. எனினும் தற்போது கொரோவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பொருளாதாரமும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வட்டி விகிதத்தினை அதிகரிக்க வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

எஸ்பிஐ பேஸ் ரேட் அதிகரிப்பினால் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினையும் அதிகரித்துள்ளது. இது 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும் எனவும், இதுவும் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமானது புதுபிக்கப்படும் டெபாசிட்டுகள் மற்றும் புதிய டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனுக்கு வட்டி அதிகரிக்கும்

கடனுக்கு வட்டி அதிகரிக்கும்

டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது ஒரு புறம் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது.எனினும் மார்ஜினல் காஸ்ட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆக இதன் கட்டண விகிதங்கள் முன்பை போலவே இருக்கும் என தெரிவித்துள்ளது. ஆக இது வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+