எஸ்பிஐ-யின் சுதந்திர தின விழா சலுகை.. 0% செயல்பாட்டு கட்டணம்.. எத்தனை நாட்களுக்கு..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா ஒரு ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்துள்ளது.

இது வீடு வாங்குவோருக்கு மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ள நிலையில், தற்போது எஸ்பிஐ வங்கி சில சலுகைகளையும் அறிவித்துள்ளது.

அதிலும் சுதந்திர தின விழாவான இன்று அறிவித்துள்ளது, வீடு வாங்குவோருக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

செயல்பாட்டு கட்டணம் குறைப்பு

செயல்பாட்டு கட்டணம் குறைப்பு

தற்போது நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு ஜீரோ செயல்பாட்டு கட்டணத்தினை அறிவித்துள்ளது. இது வீடு வாங்க நினைப்போருக்கும், வீடு கட்ட நினைப்போருக்கும் மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இது வாடகை வீட்டில் வசிப்போருக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

குறைவான வட்டியில் கடன்

குறைவான வட்டியில் கடன்

இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது குறைந்த வட்டியில், குறைந்த கட்டணங்களோடு வீட்டுக் கடனை வாங்கி பயன்பெறலாம்.

எஸ்பிஐ வங்கி ஏற்கனவே சந்தையில் மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் செயல்பாட்டுக் கட்டணமும் தள்ளுபடி செய்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ள விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

எஸ்பிஐ தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை 6.70% முதல் வழங்கி வருகின்றது. எஸ்பிஐயின் இந்த வட்டி விகிதமானது 30 லட்சம் ரூபாய் வரையில் கடன் வாங்க நினைப்பவர்களுக்கு பொருந்தும்.

கூடுதல் சலுகை

கூடுதல் சலுகை

ஏற்கனவே வட்டி விகிதம் மற்றும் செயல்பாட்டுக் கட்டணம் என அனைத்தும் குறைவாக உள்ள இந்த நேரத்தில், யோனோ ஆப் மூலமாக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சலுகைகள் கிடைக்கும்.

எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் சலுகையாக கிடைக்கும்.

இவர்களுக்கு என்ன நிலவரம்?

இவர்களுக்கு என்ன நிலவரம்?

எஸ்பிஐ வங்கியானது 35 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் வழங்கும் கடனுக்கு வட்டி விகிதம் 6.95% ஆக வழங்கப்படுகிறது. இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கு 7.05% வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது.

எஸ்பிஐயின் இந்த சலுகையினை பெற, 7208933140 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தும் ஜீரோ செயலாக்க கட்டணத்தில் வீட்டுக் கடனை பெறலாம்.

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்

இன்றைய காலத்தில் எஸ்பிஐ-விட மலிவான வீட்டுக் கடனை வழங்கும் ஒரே நிறுவனம் எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் லிமிடெட் தான். அரசுக்கு சொந்த நிறுவனமான இது 6.66% கடனை வழங்குகின்றது.

கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் காரணிகள்

கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் காரணிகள்

எனினும் இந்த கடனுக்கு நீங்கள் தகுதியானவர் தான் என்பது, உங்களின் சிபில் ஸ்கோர் மற்றும் பல காரணிகளை கொண்டு தீர்மானிக்கப்படும்.

இதோடு பெண் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் சிறப்பு எனலாம். ஏனெனில் பெண் வாடிக்கையாளார்களுக்கு சாதரணமாகவே வட்டி விகிதத்தில் சலுகை உண்டு. அதோடு செயல்பாட்டு கட்டணமும் இல்லை என்பது இன்னும் நல்ல விஷயம்.

எவ்வளவு தள்ளுபடி?

எவ்வளவு தள்ளுபடி?

தற்போது எஸ்பிஐ வங்கி தற்போது செயல்பாட்டு கட்டணமாக 0.40% வசூலிக்கிறது. இந்த நிலையில் இந்த தள்ளுபடியானது வாடிக்கையாளர்களுக்கு கணிசமான தொகையை மிச்சப்படுத்தும். ஏற்கனவே எஸ்பிஐ Monsoon Dhamaka Offer என்ற பெயரில் அறிவித்துள்ள இந்த ஆஃபரானது, ஆகஸ்ட் 31 வரையில் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போதைய வட்டி விகிதம்

தற்போதைய வட்டி விகிதம்

எஸ்பிஐ-யில் தற்போதைய வட்டி விகிதம் சம்பளதாரர்களுக்கு

SBI Home loans (Term loan) - 6.80% - 7.30 p.a.
SBI MaxGain (Floating Interest Card Rate) - 7.30 - 7.70% p.a.
SBI Insta Home Top Up Loan - 8.20% p.a.
SBI Home Top Up Loan (Term Loan) - 7.50% - 9.55% p.a.
SBI Home Top Up Loan (Overdraft) - 8.40% - 8.65% p.a.
SBI Smart Home Top-Up Loan (Term Loan) - 8.05% p.a.
SBI Smart Home Top-Up Loan (Overdraft) - 8.55% p.a.
SBI CRE Home Loan - 50 bps + final rate
SBI Tribal Plus/CRGFT - 10 bps + final rate
SBI Bridge Home Loan - First year: 9.60% p.a.
SBI Reverse Mortgage Loan - Public: 9.05% p.a.
SBI Bridge Home Loan - First year: 9.60% p.a., Second year: 10.50% p.a.
SBI Privilege and Shaurya - 6.95% p.a. onwards
SBI Realty - 7.65% p.a. onwards

சுயதொழில் செய்வோருக்கு வட்டி விகிதம்

சுயதொழில் செய்வோருக்கு வட்டி விகிதம்

SBI Home loans (Term loan) - 7.10% - 7.50% p.a.
SBI MaxGain (Floating Interest Card Rate) - 7.45% - 7.85% p.a.
SBI Insta Home Top Up Loan - 8.20% p.a.
SBI Home Top Up Loan (Term Loan) - 7.65% - 9.70% p.a.
SBI Home Top Up Loan (Overdraft) - 8.55% - 8.80% p.a.
SBI Smart Home Top-Up Loan (Term Loan) - 8.55% p.a.
SBI Smart Home Top-Up Loan (Overdraft) - 9.05% p.a.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+