தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாத சம்பளக்காரர்கள் தங்கள் சேமிப்பை பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது வங்கி ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் (FD) மட்டுமே வைப்பது வழக்கமாக கொண்டு உள்ளனர். இவை பாதுகாப்பானவை என்றாலும், உண்மையில் இவற்றை விட சிறந்த மற்றும் வரி சலுகை கொண்ட முதலீட்டு வழி ஒன்று உள்ளது - வாலென்டரி பிராவிடெண்ட் ஃபண்ட் (VPF).
EPF கணக்கு உள்ள அனைத்து ஊழியர்கள் இந்த ஒரு சேவை இருக்கும் வேளையில், பலர் இதை பயன்படுத்துவது இல்லை. PPF-ஐ விட அதிக வட்டி பெறலாம், அதுமட்டும் அல்லாமல் வரி சலுகையும் இதில் இருக்கும் காரணத்தால் இது பெரிய அளவில் பலன் அளிக்கும். தமிழ்நாட்டில் IT, ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் துறைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய நன்மை தரும்.

PPF மற்றும் FD-இன் வட்டி வரம்புகள் என்ன?
PPF வட்டி தற்போது சுமார் 7.1% ஆக உள்ளது. இத்திட்டத்தில் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை என்றாலும், வட்டி குறைவு. வங்கி FDகள் 6-8% வரை தரலாம் ஆனால் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். 30% வரி பிரிவில் உள்ளவருக்கு 7% FD வட்டி வரி கழித்த பிறகு 5%க்கும் குறைவான வட்டி பலனை கிடைக்கும். இதனால் உண்மையான லாபம் கணிசமாக குறைகிறது. தமிழ்நாட்டில் சம்பளம் பெறும் பலர் இந்த வரி சுமையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
VPF என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?
VPF என்பது உங்கள் EPF கணக்கின் நீட்டிப்பு சேவை. EPF-இல் அடிப்படை சம்பளத்தின் 12% தொகை கட்டாயமாக செலுத்தப்படுகிறது. VPF மூலம் கூடுதலாக தொகையை உங்கள் விருப்பத்தின் படி செலுத்தலாம், EPF-க்கு கிடைக்கும் அனைத்து விதமாக சலுகையும் பலனும் இதற்கும் கிடைக்கும். உதாரணமாக VPF-க்கு உங்களுடை மாத சம்பளத்தில் அதிகப்பட்சமாக அடிப்படை + DA தொகையை மொத்தமாகவும் இதில் செலுத்தலாம்.
VPF-க்கு EPF போலவே வட்டி கிடைக்கும். தற்போது EPF வட்டி 8.25% ஆக உள்ளது. இது அரசு உத்தரவாதம் தரும் பாதுகாப்பான திட்டம் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்யலம். தமிழ்நாட்டில் IT நிறுவனங்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், அரசு ஊழியர்கள் இதைப் பயன்படுத்தி அதிக லாபம் பெற முடியும்.
வரி இல்லா நன்மை
EPF + VPF மொத்த பங்களிப்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் இருந்தால், வட்டி முழுமையாக வரி விலக்கு கிடைக்கும். இதன் மூலம் மாதம் ஒருவர் சுமார் ரூ.20,000 கூடுதலாக இதில் முதலீடு செய்யலாம். இந்த வரம்பைத் தாண்டினால் வரம்பை தாண்டி செலுத்தும் கூடுதல் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். எனவே திட்டமிட்டு பங்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க ஊழியர்கள் இதைப் பயன்படுத்தினால் வரி சுமை குறையும், சேமிப்பு அதிகரிக்கும். EPF + VPF மொத்த பங்களிப்பை 80சி வருமான வரி பிரிவு கீழ் வரி விலக்கு பெற முடியும்.
8.25% வரி இல்லா வட்டி ஏன் சக்திவாய்ந்தது?
30% வருமான வரி பிரிவில் உள்ளவருக்கு 8.25% வரி இல்லா வட்டி என்பது சுமார் 12% FD வட்டிக்கு சமம். 10% வரி பிரிவில் உள்ளவருக்கும் இது சுமார் 9.2% FD வட்டிக்கு சமம். அரசு பாதுகாப்புட் வரும் திட்டங்களில் இதைவிட உயர் லாபம் தருவது அரிது. தமிழ்நாட்டில் சம்பளம் பெறும் பலர் இந்த வித்தியாசத்தை புரிந்துகொண்டு VPF-ஐ தேர்வு செய்தால் நீண்டகாலத்தில் பெரும் செல்வம் உருவாகும்.
பலர் VPF-ஐ ஏன் பயன்படுத்துவதில்லை?
பல ஊழியர்கள் கட்டாய 12% EPF மட்டுமே செலுத்தி, தனியாக PPF அல்லது வரி விதிக்கப்படும் FD-களில் முதலீடு செய்கின்றனர். VPF இருப்பது பலருக்குத் தெரியாது. அல்லது உங்கள் நிறுவனத்தின் HR மூலம் எளிதாக தொடங்க முடியும் என்று தெரியவில்லை.
VPF எப்படி தொடங்குவது?
நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருக்கும் HR அல்லது ஊதியப் பிரிவைத் தொடர்பு கொண்டு வாலென்டரி பிராவிடெண்ட் ஃபண்ட் தொடங்கச் சொல்லுங்கள். HR அதிகாரிகள் இதை மறுப்பது கிடையாது, எனவை ஒரு மாதத்தில் எவ்வளவு தொகை கூடுதலாக முதலீடு செய்ய முடியும் என்பதை முடிவு செய்யுங்கள்.
கவனிக்க வேண்டியவை விஷயங்கள்
VPF-இல் EPF போலவே பணத்தை திரும்பப் பெறும் விதிகள் உள்ளன. பணம் நீண்டகாலத்திற்கு லாக் செய்யப்படும் காரணத்தால், இது ஓய்வூதிய சேமிப்புக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டி ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு, வட்டி தொகை டெபாசிட் செய்யப்படும். FD போல திரவத்தன்மை (liquidity) குறைவு என்றாலும் நீண்டகால ஓய்வூதிய திட்டமிடலுக்கு ஏற்றது. ஆபத்து தவிர்க்கும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தனியார், அரசு ஊழியர்களுக்கும் VPF சேவையை பயன்படுத்தினால் நீண்டகாலத்தில் பெரும் செல்வம் உருவாக்க முடியும். முதலில் நீங்கள் பணியாற்றும் இடத்தில் VPF சேவை உள்ளதாக என்பதை உறுதி செய்துக்கொண்டு முதலீடு செய்ய திட்டமிடுங்கள்.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications