தற்போது நிலவி வரும் காலகட்டத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். ஏனெனில் ஒமிக்ரான் தாக்கமானது 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பங்கு சந்தைகள் என்னவாகுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
இதன் எதிரொலியாக ஏற்கனவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த சில தினங்களாகவே பெரியளவில் சரிவினைக் கண்டு வருகின்றது.
இப்போது வாங்கலாமா?
ஆனால் இந்த காலகட்டத்தில் வாங்கலாம் என ஒரு பங்கினை தரகு நிறுவனம் கணித்துள்ளது எனில், ஏன் அதனை வாங்க பரிந்துரை செய்துள்ளது. உண்மையான காரணம் தான் என்ன? அப்படியென்ன பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஹெச்.சி.எல் டெக்னாலஜி
நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கின் பெயர் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தினை பற்றி தான். இந்த நிறுவனத்தின் பங்கினைத் தான் வாங்க ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனமும் பரிந்துரை செய்துள்ளது.
இலக்கு விலை
ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் இலக்கு விலையாக 1,339 ரூபாயினை தரகு நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய நிலையில் இருந்து, 17% அதிகரிக்கலாம் என கணித்துள்ளது. தற்போதைய விலை நிலவரம் ஆனது 1144 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
பெட்டர் காலாண்டு முடிவுகள்
இந்த நிறுவனம் சமீபத்தில் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. இது எதிர்பார்த்ததை விட நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில் எபிடா மார்ஜின் 19%ல் இருந்து 21% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது கடந்த காலாண்டினை காட்டிலும் 2.9% வளர்ச்சி கண்டும், இதே கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11.1% வளர்ச்சியும் கண்டுள்ளது.
புதிய ஒப்பந்தம்
இந்த நிறுவனத்தின் புதிய ஒப்பந்த விகிதமானது கடந்த காலாண்டினை காட்டிலும் 35%ம் வளர்ச்சி கண்டும், இதே கடந்த ஆண்டினை காட்டிலும் 38% வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. மொத்தம் 14 மிகப்பெரிய ஒப்பந்தங்களை இரண்டாவது காலாண்டில் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 7.3 பில்லியன் டாலர்களாகும்.
வலுகான வளர்ச்சி
தொடர்ந்து எதிர்பார்ப்பினை விட வலுவான வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டிஜிட்டல் துறையானது மிகப்பெரியளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் அடுத்து வரும் காலாண்டுகளிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த இறுவனத்தின் பங்கினை தரகு நிறுவனத்தின் நிபுணர்கள் கணித்திருந்தாலும், அதனை வாங்கும் முன்னர் நீங்கள் சரியானதா? என தீர்மானித்துக் கொண்டு இறுதி முடிவினை நீங்கள் எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications