ராகேஷ் ஜுன் ஜுன்வாலா இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் இவர், முழு நேர பங்கு சந்தை முதலீட்டாளர் ஆவார். இவரின் போர்ட்போலியோ பங்குகள் பற்றி தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவர்.
அப்படி ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள மல்டிபேக்கர் பங்கான ஆனந்த ராஜ் பற்றி தான் பார்க்கவிருக்கிறோம்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்றம் கண்டு வரும் ஆனந்த் ராஜ் நிறுவன பங்கின் விலையானது, நடப்பு ஆண்டில் மட்டும் 150% ஏற்றத்தில் காணப்படுகிறது.
நல்ல ஏற்றம்
இந்த மல்டிபேக்கர் பங்கானது 27 ரூபாயில் இருந்து 67.45 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்கள் இந்த பங்கின் விலையானது மூன்று இலக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். ஸ்டாக் மார்கெட் நிபுணர்கள் நிஃப்டி ரியால்டி இன்டெக்ஸ் 10 ஆண்டுகால இடைவெளியை கொடுத்துள்ளது.
முதலீடுகள் ஈர்க்கப்படலாம்
இந்த இடைவெளி நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த பங்கில் FPI மற்றும் FII முதலீடுகளை ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று நோய் காலத்திலும் தொடர்ந்து மூன்று காலாண்டுகளில் நிறுவனம் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை இலக்கு
ஆனந்த் ராஜ்ஜின் பங்கு விலையானது 80 ரூபாய் என்ற லெவலான முக்கிய சப்போர்ட் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை உடைத்தால் 100 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இந்த லெவலை உடைத்தால் 155 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுவும் ஒரு காரணம்
கொரோனாவின் தாக்கம் இருந்த போதிலும் இந்த நிறுவனம் நல்ல செயல்திறனை காட்டியது. இதனால் நல்ல வருவாய் மற்றும் லாபத்தினை காட்டியது. ராகேஷ் ஜுன் ஜுன் வாலாவின் முதலீடு, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு என பலவும் சேர்ந்து தான் இந்த பங்கின் விலையினை உயர்த்தியது. ஆக பங்கு விலை ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
Disclaimer: மேற்கண்ட இந்த பங்கு பரிந்துரையை பங்கு சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் முதலீடு செய்வது நல்லது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications