பொதுவாக பலருக்கும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதற்கான சரியான அனுபவம் இருக்காது. இதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வர்.
குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளை தேர்தெடுத்து வணிகம் செய்வர். இது லாபகரமானதாக இருக்கும்.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் நல்ல லாபத்தினை கொடுக்கும் விதமாக, சிறந்த தேர்தெடுக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வர். அப்படி தேர்தெடுக்கப்பட்ட சில பங்குகளை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
முதலீடுகள் அதிகரிப்பு
குறிப்பாக எந்தெந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளன. எந்த நிறுவனங்களின் பங்குகளை அதிகரித்துள்ளன வாருங்கள் பார்க்கலாம். கடந்த சில காலாண்டுகளாக பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மீள்ச்சி கண்டு வந்தது. இதற்கிடையில் அன்னிய முதலீடுகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.
ஏற்றம் ஏன்?
இதற்கிடையில் தான் பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன. இதனால் சந்தையானது நடப்பு ஆண்டில் லாபகரமான முதலீடாக மாறியுள்ளது. இந்த பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட ஃபண்டுகளும் நல்ல லாபத்தில் உள்ளன. இதற்கிடையில் உள்நாட்டு ஃபண்டுகள் வாங்கிய பங்குகள் என்ன என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, கடந்த டிசம்பர் 2020 - செப்டம்பர் 2021 வரையிலாக காலகட்டத்தில், உள் நாட்டு மியூச்சுவல் ஃபாண்டுகள் 33,852 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதில் பங்குகள் அதிகரிக்கப்பட்ட பங்குகளில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் முதல் உள்ளது. இந்த பங்கில் கடந்த டிசம்பர் 2020ல் 1.6% ஆக இருந்த பங்கின் விகிதமானது, செப்டம்பர் 2021ல் 6.3% ஆக அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ கார்டுகள் &பேமெண்ட் சர்வீசஸ்
அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் நிறுவனம் எஸ்பிஐ கார்டுகள் &பேமெண்ட் சர்வீசஸ். இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு பேமெண்ட் சேவையினை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 2020ல் 2.9% ஆக இருந்த பங்கு விகிதம், செப்டம்பர் 2021ல் 6.7% ஆக அதிகரித்துள்ளது.
பாலிகேப் இந்தியா லிமிடெட்
கேபிள் உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் 4% ஆக இருந்த பங்கின் விலையானது, செப்டம்பர் 2021ல் 8% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இதன் பங்கு வெளியீட்டில் இருந்து, 300% அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்கில் டிசம்பர் 2020ல் 4.9% ஆக் இருந்த பங்கு விகிதம், செப்டம்பர் 2021ல் 10.9% ஆக அதிகரித்துள்ளது.
சிட்டி யூனியன் வங்கி - இதில் டிசம்பர் 2020ல் 27.6% ஆக இருந்த பங்கி விகிதம், 31.4% ஆக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications