பொதுவாக பங்குகள் அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் லாபகரமான முதலீடாக இருந்தாலும், எது சிறந்தது? எது லாபகரமானது? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
நீங்கள் ஓய்வுகாலத்திற்காகவோ அல்லது உங்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக சேமிக்க நினைக்கிறீர்களா? அல்லது உங்களது கனவு காரை வாங்க நினைக்கிறீர்களா? உங்களது கனவு சுற்றுலா செல்ல நினைக்கிறீர்களா? இது எல்லாவற்றிற்கும் ஏற்ப உங்களது முதலீட்டினை திட்டமிட வேண்டும். இந்த இலக்குகளை அடைய பங்கு சந்தை அல்லது ரியல் எஸ்டேட் எது சிறந்தது? எது பாதுகாப்பானது?
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் முதலீடு என்பது நீண்டகால நோக்கில் மிக பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் மிகப்பெரிய அளவில் சொத்தினை உருவாக்க இது பயனுள்ளதாக இருக்கும். இது நீண்டகால நோக்கில் சரியான இடத்தில் தேர்வு செய்தால், இது உங்களுக்கு பயனுள்ளதாக அமையலாம்.
பங்கு சந்தை
இதே பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் அது உங்களின் மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்கினை எட்ட உதவும். எனினும் இதில் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் உங்கள் முதலீடு பாதிக்கப்படலாம். இதில் சற்று ரிஸ்கும் அதிகம். அதேசமயம் லாபமும் அதிகம். எனினும் இதில் சந்தையின் தாக்கமும் இருக்கும்.
ரியல் எஸ்டேட் முதலீட்டின்
ரியல் எஸ்டேட் முதலீட்டினை பொறுத்தவரையில் நீங்கள் நீண்டகால நோக்கில் சரியான இடத்தில் முதலீட்டினை செய்தால், நீண்டகால நோக்கில் உங்கள் முதலீட்டின் மதிப்பும் அதிகரிக்கும். அதோடு உங்களது ரியல் எஸ்டேட் மூலம் வருமானமும் பார்க்க முடியும். குறிப்பாக ரெசசன் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், சொத்துகள் விற்பனை என்பது குறைந்த விலையில் வாங்க வாய்ப்புகள் கிடைக்கலாம். இதனை ஹோம் லோன் போன்ற ஆப்சன் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.
எது பெஸ்ட்?
கொரோனாவின் வருக்கைக்கு பிறகு ரியல் எஸ்டேட் முதலீடானது கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் சொந்தமாக தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பங்குகள் ஒரு கட்டத்தில் லாபம் கொடுத்தாலும், முதலீட்டாளர்கள் அதனை விற்பனை செய்து வெளியேறலாம். ஆனால் ரியல் எஸ்டேட் முதலீடு என்பது நீண்டகால நோக்கில் பாதுகாப்பானதாகவும், நல்ல வருமானம் கொடுக்க கூடியதாகவும் இருக்கும். ஆனால் பங்குகள் அப்படி இல்லை. அதில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.
ரியல் எஸ்டேட் தான் பெஸ்ட்
ரியல் எஸ்டேட் முதலீடுகளை பொறுத்த வரையில் இது நிலையான வருமானம் தரும் முதலீடாக இருக்கும். இது நிச்சயம் நீண்டகால நோக்கில் பெரும் வருமானம் கொடுக்கலாம். சமீப காலமாக மெட்ரோ நகரங்களில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆக நீண்டகால நோக்கில் சரியான ஒரு முதலீட்டினை தேர்வு செய்யும்போது, உங்கள் சொத்தின் மதிப்பும் அதிகரிக்கும். இதன் மூலம் மாத மாதம் வருமானமும் பெற முடியும்.
முதலீட்டுக்கே பிரச்சனை
ஆனால் பங்கு சந்தையில் அப்படி இல்லை. நீங்கள் வாங்கிய பங்கின் விலையானது அதிகரித்தால், உங்கள் லாபம் அதிகரிக்கும். ஒரு வேளை பங்கின் விலை சரிந்தால் முதலீடும் சேர்ந்து காலியாகிவிடும். சரியான அனுபவம் இல்லாதவர்களுக்கு இது ஏற்றதொரு முதலீடாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications