மாதத்தின் முதல் தேதி சம்பள மெசேஜ் வந்ததும் முகத்தில் வரும் சிரிப்பு, இரண்டாம் தேதி EMI டெபிட் ஆனதும் காணாமல் போய் விடுகிறதா? சம்பளம் வாங்குறோமா இல்ல EMI கட்டுறதுக்காகவே வேலை பாக்குறோமா, அப்படின்னு உங்களுக்கு தோணுதா? நீங்க மட்டும் இல்ல, இன்றைய காலத்தில் பலர் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.
கடன் வாங்குவது தப்பில்லை, ஆனால் அது நம்ம கழுத்தை நெறிக்க கூடாது. வாங்கிய கடனை வட்டியோடு சேர்த்து எப்படி குறைக்கலாம்? உங்க பாக்கெட்டில் பணத்தை எப்படி தக்க வைக்கலாம்? உங்கள் நிதிச் சுதந்திரத்தை மீட்டெடுக்க உதவும் 5 ரகசியங்கள் என்னென்ன? இனி EMI பயத்தை விடுத்து, சேமிப்புக்கு எப்படி ரெடி ஆவது என பார்ப்போமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் கடன் பெறுவது என்பது மிக எளிதாகி விட்டது. அது வங்கிக்கு செல்லும் நேரத்தில் ஆன்லைனில் கடன் பெற்று விடலாம். இது மிக நல்ல விஷயம் தான் என்றாலும், பலரும் அவர்களையும் அறியாமல் எளிதில் கடன் வலையில் சிக்கிக் கொள்கின்றனர். பலருடைய மாதச் சம்பளம் சேமிப்பிற்கோ அல்லது மற்ற தேவைகளுக்கோ பயன்படாமல், முக்கால்வாசி மாத தவணைகளுக்கே சென்றுவிடுகிறது. வட்டி விகிதங்களின் உயர்வு பட்ஜெட் போடுவதையே சவாலாக மாற்றியுள்ளது. ஆனால், முறையான திட்டமிடல் இருந்தால் இந்த நிதி நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடியும்.
HDB நிதிச் சேவையின் முதன்மை கடன் அதிகாரி ரோஹித் பட்வர்தன் இது குறித்து கூறுகையில், மாத தவணைகள் உயரும் போது அது குடும்பத்தின் பணப்புழக்கத்தை பாதிக்கும். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்து, அதிக வட்டி கொண்ட கடன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வருமான சுழற்சிக்கு ஏற்ப திருப்பி செலுத்தும் முறையை அமைப்பதும், அளவுக்கு அதிகமாக கடன் வாங்குவதை தவிர்ப்பதும் மிக அவசியம். அப்படி இருந்தால் மட்டுமே கடன் என்னும் மாய அரக்கனிடம் இருந்து தப்பிக்க முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
1. உங்கள் மாதச் செலவுகளை கண்கானித்து, எங்கு பணம் வீணாகிறது அதாவது தேவையில்லாமல் அதிக செலவாகிறது என்பதை கண்டறியுங்கள். அப்படி கண்டறியும் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைத்து, அந்த பணத்தை கடனை அடைக்க பயன்படுத்துங்கள்.
2. எல்லா கடன்களும் ஒன்றல்ல. கிரெடிட் கார்டு போன்ற அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் அடையுங்கள். தேவைப்பட்டால் பல சிறிய கடன்களை ஒன்றாக இணைத்து கடன் ஒருங்கிணைத்தல் (Debt Consolidation) முறையை பின்பற்றலாம்.
3. அவசர கால தேவைகளுக்காக 3 முதல் 6 மாத கால செலவுக்கான தொகையை சேமித்து வைப்பது, உங்கள் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தும். ஆக உங்கள் கடன், சேமிப்பின் மத்தியில் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவது அவசியம்.
4. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற உதவும்.
நிதியைச் சீரமைக்க 5 நடைமுறை வழிகள்
• மாதந்தோறும் உங்கள் செலவுகளை கணக்கெடுத்து, அத்தியாவசியமற்ற செலவுகளை குறையுங்கள்.
• அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் முடிப்பதன் மூலம் வட்டிச் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.
• எதிர்பாராமல் ஏற்படும் செலவுகளை சமாளிக்க அவசரகால நிதியாக ஒரு தொகையை தனியாக ஒதுக்குங்கள்.
• உங்கள் EMI தேதிகளை சம்பளம் வரும் தேதியோடு ஒத்துப் போகுமாறு அமைப்பது அபராதங்களை தவிர்க்க உதவும்.
• பழைய கடன்களை அடைக்கும் வரை புதிய கடன்களை வாங்குவதைத் தவிப்பது புத்திசாலித்தனம்.
பொறுப்பற்ற முறையில் கடன் வாங்குவதும், தவணைகளை செலுத்த தவறுவதும் உங்கள் கிரெடிட் புரொபைலை நீண்ட காலத்திற்கு பாதிக்கும். எனவே எந்த ஒரு கடன் வாங்கும் முன்பும் அது உங்கள் நீண்ட கால இலக்குகளுக்கு தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையெனில் ஒரு நிதி ஆலோசகரை அணுகுவதே சிறந்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications

