தற்போது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் பலருக்கும் வங்கிக் கடன்கள் தான் பெரிய அளவில் கை கொடுக்கின்றன . வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன.
இவ்வாறு வங்கி கடன் வாங்குவோர் அந்த கடனை அடைப்பதற்காக அடுத்த 25 ஆண்டுகாலத்திற்கு கட்டாயம் உழைத்தாக வேண்டும் மாதந்தோறும் ஈஎம்ஐ தொகையை செலுத்தி ஆக வேண்டும். 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது நாம் வாங்கிய கடனை விட பல மடங்கு அதிகமான பணத்தை நாம் கூடுதலாக வங்கிக்கு வட்டியாகவே செலுத்தி இருப்போம்.

இந்நிலையில் பட்டய கணக்காளரான நிதின் கௌசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு டிரிக்கை வெளியிட்டுள்ளார். இதை ஃபாலோ செய்தால் 30 ஆண்டுகாலம் வீட்டு கடனை 17 ஆண்டுகளிலேயே செலுத்தி விடலாம் என தெரிவித்துள்ளார். வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைப்பது எப்படி என்பது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.
வீட்டு கடன் வாங்கும் போது குறைந்தது 30 ஆண்டு காலத்திற்கு வாங்குங்கள் என அறிவுரை வழங்குகிறார். கடன் திரும்ப செலுத்தும் காலம் அதிகமாக இருந்தால் மாதாந்திர ஈஎம்ஐ தொகை குறையும் அது தான் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என கூறுகிறார். இதோடு இவர் கூறும் ஒரு டிரிக்கை ஃபாலோ செய்தால் பல லட்சங்களை சேமிக்க முடியும் என கூறுகிறார். அவர் கூறும் உதாரணத்தை தற்போது பார்க்கலாம்.
50 லட்சம் ரூபாய்க்கு வீட்டு கடன் வாங்கி இருக்கிறோம் என வைத்து கொள்வோம், இதற்கு 8% வட்டி விதிக்கப்படுகிறது. கடன் காலம் 30 ஆண்டுகள் எனில் மாதாந்திர ஈஎம்ஐ 36,688 ரூபாய், இதுவே கடன் காலம் 20 ஆண்டுகள் எனில் மாதாந்திர ஈஎம்ஐ 41,822. கடன் காலத்தை 30 ஆண்டுகளாக கொண்டால் நாம் மாதாந்திர ஈஎம் ஐ தொகையில் மட்டும் 5,134 ரூபாய் சேமிக்க முடியும். இப்படி பார்த்தால் ஓராணுடுக்கு நாம் 61,608 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த பணத்தை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 12 ஈஎம்ஐ உடன் சேர்த்து கூடுதலாக ஒரு ஈஎம்ஐ செலுத்த வேண்டும். அப்படி என்றால் ஆண்டுக்கு நாம் 12 ஈஎம்ஐ செலுத்தி இருப்போம்.

பழைய முறையில் ஆண்டுக்கு 12 ஈஎம்ஐ செலுத்தினால் 50 லட்சம் ரூபாய் வீட்டு கடனுக்கு நாம் வட்டியாக 82.1 லட்சம் ரூபாய், கடன் தொகையுடன் சேர்த்து மொத்தம் 1.32 கோடி ரூபாயை 30 ஆண்டுகாலத்திற்கும், மொத்தமாக செலுத்தி இருப்போம்.
இது ஆண்டுக்கு ஒரு ஈஎம்ஐ கூடுதலாக சேர்த்தால் மொத்தம் 13 ஈஎம்ஐ செலுத்தி இருப்போம். இந்த முறையில் நாம் 17 ஆண்டுகளிலேயே கடனை செலுத்தி முடித்து இருப்போம். அதாவது கடனே முடிந்து விடும், இதில் நாம் வாங்கிய கடனுக்கு 48 லட்சம் ரூபாய் தான் வட்டியாக செலுத்தி இருப்போம். அதாவது மொத்தமாக 98 லட்சம் தான் திரும்ப செலுத்து இருப்போம். இந்த ஒரு கூடுதல் ஈஎம்ஐ நமக்கு வட்டியில் 34 லட்சத்தையும், கடன் காலத்தில் 13 ஆண்டுகளையும் சேமித்து தருகிறது என அவர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications