இந்தியாவில் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் எனப்படும் செல்வ மகள் திட்டம் என பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அரசு அஞ்சல் அலுவலகங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள், ஓய்வூதிய தாரர்கள், மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் பணத்தை சிறுக சிறுக சேமிக்க இந்த சேமிப்பு திட்டங்களை தான் பயன்படுத்துகின்றனர். அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் இந்த சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கக்கூடிய வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2025 -26 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2025 - 26 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு இது நாள் வரை வழங்கப்பட்டு வந்த 8.2% என்ற வட்டி விகிதம் அப்படியே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போஸ்ட் ஆஃபிஸ் சேவிங்ஸ் டெபாசிட் திட்டங்களுக்கு 4 சதவீத வட்டி என்பது வழங்கப்படும். அதேபோல ஒரு ஆண்டுக்கான டைம் டெபாசிட் திட்டத்திற்கு 6.9% வட்டி , இரண்டு ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீத வட்டி, மூன்று ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட்களுக்கு 7 .1 சதவீத வட்டி வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8 .2 சதவீத வட்டி வழங்கப்படும் , தேசிய சேமிப்பு பத்திர திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி , கிஷான் விகாஸ் பத்திரம் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி அப்படியே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு தபால் அலுவலகங்கள் மூலம் வழங்கக்கூடிய பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை தொடர்ந்து ஆறாவது காலாண்டாக மாற்றாமலே வைத்திருக்கிறது. இந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வங்கிகள் அனைத்துமே தாங்கள் வழங்கி வந்த சேமிப்பு திட்டங்களுக்கான வடிவிகிதங்களை குறைத்துவிட்டன . இருந்தாலும் மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வழங்கிய வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
இதற்கு முன்னதாக 2023 -24 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் அரசு இந்த சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. அப்போது சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதம் 8 லிருந்து 8.2% ஆகவும் 3 ஆண்டு கால டைம் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி 7இல் இருந்து 7.1 சதவீதம் என உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை வட்டி விகிதங்களில் எந்த ஒரு மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அடுத்த வட்டி விகித அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications