பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையை கவனத்தில் கொண்டு பெற்றோர் சிறுக சிறுக அவர்களுக்காக சேமிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். தமிழ்நாட்டில் இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் முடிந்துள்ளன. 2015ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி தான் பிரதமர் மோடி இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த 11 ஆண்டுகளில் இந்த திட்டத்தில் எத்தனை பேர் முதலீடு செய்துள்ளார்கள், இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் , எவ்வளவு முதலீடு செய்தால் உங்கள் பெண் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பன உள்ளிட்ட விரிவான தகவல்களை மத்திய அரசே வெளியிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் தற்போது இந்த திட்டத்தின் கீழ் 4.53 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்த திட்டத்தில் மட்டும் 3.3 லட்சம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் செயல்படக்கூடிய தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கினை தொடங்கலாம்.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையம் அல்லது வங்கியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீத வட்டி என்பது வழங்கப்படுகிறது.
கணக்கு முதிர்வு பெற்ற பிறகும் தொடர்ந்து நீங்கள் கணக்கை முடிக்காமல் தொடர்ந்து அதில் பணத்தை வைத்திருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். நாட்டின் எந்த பகுதியிலும் இருக்கும் தபால் நிலையம் மற்றும் வங்கியிலும் இந்த கணக்கை மாற்றிக் கொள்ளலாம். பத்து வயதுக்குள் இருக்கக்கூடிய பெண் குழந்தையின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை நாம் முதலீடு செய்து கொண்டே வரவேண்டும்.
அந்த குழந்தைக்கு 15 வயது ஆகும் வரை முதலீட்டை தொடரலாம். 18 வயது ஆன பிறகு அந்த கணக்கினை அந்த பெண் குழந்தை தானாகவே நிர்வகித்துக் கொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீட்டிக்கும் வட்டிக்கும் 100% பாதுகாப்பு உண்டு.
இதில் வட்டி என்பது கணக்கிடப்பட்டு கணக்கில் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு விடும். தற்போது இதற்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது. பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கணக்கில் இருக்கும் பணத்தில் 50 சதவீத தொகையை கல்விக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த கணக்கு தொடங்கி 21 ஆண்டுகள் முடியும் போது கணக்கு முதிர்ச்சி அடையும்.
2026 ஆம் ஆண்டில் உங்கள் பெண் குழந்தைக்கு தற்போது ஐந்து வயது ஆகிறது என வைத்து கொள்வோம் நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 55,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால். 21 ஆண்டுகள் முடியும்போது அதாவது 2047 ஆம் ஆண்டில் நீங்கள் செய்த மொத்த முதலீடு 8,25,000 ரூபாய் ஆனால் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் வட்டி மட்டுமே 17,34,000 ரூபாய். ஒட்டுமொத்தமாக உங்கள் கைகளுக்கு 25,59,367 ரூபாய் கிடைக்கும்.இந்தியாவில் வேறு எந்த முதலீட்டு திட்டத்திலும் இவ்வளவு அதிக வட்டி கிடைப்பதில்லை. அது மட்டும் இல்லாமல் இது மத்திய அரசு ஆதரவு தரும் திட்டம் என்பதால் உங்களுடைய பணம் மோசம் போகாது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications