செல்வ மகள் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ,5000 முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும்?

இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் உயர்கல்வி செலவுகளைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிக பிரபலமான ஒரு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். இதனை சுகன்யா சம்ரிதி யோஜனா என்றும் அழைக்கிறோம்.

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான பெற்றோர் இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்கின்றனர். தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாதந்தோறும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் கையில் கிடைக்கும் தொகை எவ்வளவு என விரிவாக பார்க்கலாம்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்: மாதம் ரூ,5000 முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும்?

பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதுக்குள் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட வேண்டும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து குழந்தைக்கு 15 வயதாகும் வரை தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். அதன் பின் பணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த பணத்தை 18 வயதிலும் 21 வயதிலும் என பிரித்து எடுத்து பயன்படுத்தலாம்.அதுவரை கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 250 ரூபாயும், அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு, ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டி முற்றிலும் வரிவிலக்கு பெற்றது, மேலும் முதிர்வு தொகையும் முழுமையாக வரி விலக்கு பெறுகிறது.

Also Read

இந்த திட்டத்தில் நீங்கள் உங்களின் பெண் குழந்தையின் பெயரில் மாதம் 5000 ரூபாய் சேமித்து வந்தால் என்ன ஆகும் என பார்க்கலாம்.

ஒரு ஆண்டு முதலீடு: ரூ. 60,000 (மாதம் ரூ. 5,000 x 12 மாதங்கள்)

மொத்த முதலீட்டு (15 ஆண்டுகளுக்கு): ரூ. 9,00,000

8.2% வட்டியில் 21 வயதில் முதிர்வு தொகை: ரூ. 27.73 லட்சம்

வட்டி மட்டுமே : ரூ.18.75 லட்சம்

Recommended For You

பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பின்னரோ அல்லது 10-ஆம் வகுப்பு வெற்றிகரமாக முடித்த பின்னரோ, உயர் கல்வி செலவுகள் மற்றும் கல்லூரி சேர்க்கை கட்டணத்திற்காக முந்தைய ஆண்டின் இறுதி இருப்பு தொகையில் இருந்து 50% வரை பணத்தை முன்பணமாக பெறலாம். மீதமுள்ள பணத்தை 21 வயதுக்கு பின்னர் பெற முடியும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பது அரசின் முழுமையான பாதுகாப்பை கொண்ட திட்டம், மேலும் கூட்டு வட்டி பலன்களை தருவதால் பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்கு மிக சிறந்த ஒரு சேமிப்பு திட்டம். உங்களுடைய நிதி நிலைக்கு ஏற்ப மாதந்தோறும் கணிசமான பணத்தை முதலீடு செய்வதன் மூலம், வரி சலுகைகளுடன் லட்சக்கணக்கில் லாபத்தையும் பெற முடியும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+