உங்கள் பெண் குழந்தையின் கல்விக்கு இது போதுமானதா.. சுகன்யா சம்ரிதி யோஜனா சரியான திட்டமா?

பெண் குழந்தைகளுக்கென மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளலாம்.

பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை காக்கும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும்.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

இதற்கான வட்டி விகிதம் 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான ஒரு திட்டமாக இருக்கும்.

எத்தனை கணக்கு

எத்தனை கணக்கு

அரசின் இந்த சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கானது. ஆக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். அதே போல ஒரு குடும்பத்தில் உள்ள இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.

குறைந்தபட்சம் எவ்வளவு?

குறைந்தபட்சம் எவ்வளவு?

பெண் குழந்தைகளிளுக்கான இந்த சேமிப்பு திட்டமானது பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம் என்பதால், ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து, குறைந்தது 15 வருடத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலைகளை செய்கின்றன. ஆக அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். அஞ்சலகம் மட்டும் அல்ல, பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலமும் தொடங்கி கொள்ளலாம்.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 80 சி பிரிவின் கீழ், அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

போதுமானதா?

போதுமானதா?

அதெல்லாம் சரி, இந்த திட்டம் குழந்தைகளின் கல்விக்கு போதுமானதா? உதாரணத்திற்கு உங்கள் குழந்தைக்கு 3 வயது என வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீட்டினை 15 வருடம் செய்தால், அதற்கு வட்டி விகிதம் 7.6% என வைத்துக் கொண்டால், முதிர்வுக்கு பிறகு உங்களது கார்ப்பஸ் 43.49 லட்சம் ரூபாயாக இருக்கும்.

கல்வி கட்டணங்கள்

கல்வி கட்டணங்கள்

தற்போது அமெரிக்காவில் கல்லூரி கட்டணங்கள் வருடத்திற்கு 50 - 60 லட்சம் ரூபாயாகும். இதே இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு எனும்போது கட்டணங்கள் கோடிகளில் இருக்கலாம்.
இதே இந்திய கல்லூரிகளிலும் கட்டணங்கள் அதிகரிக்கலாம்.
பொதுவான படிப்புகளுக்கு தற்போது 5 லட்சம் ரூபாய் எனக் கொண்டால், எதிர்காலத்தில் 20 லட்சம் ரூபாயாக அதிகரிக்கலாம்.
மெடிக்கல் படிப்புகளுக்கு 25 - 30 லட்சம் ரூபாய் என்ற நிலையில், எதிர்காலத்தில் 1.04 கோடி ரூபாய் முதல் 1.25 கோடி ரூபாயாக உள்ளது.
மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு தற்போது 40 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் 1.67 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம்.

இது சரியான திட்டமா?

இது சரியான திட்டமா?

ஆக அஞ்சலகத்தின் இந்த திட்டமானது எதிர்காலத்தில் உங்களது பெண் குழந்தையானது நல்லதொரு கல்வியை படிக்க, இது ஏற்றதாக இருக்காது. இதனுடன் ஈக்விட்டி ஒரியண்ட் ஃபண்டுகள், டெப்ட் பண்டுகள் என பங்கு சந்தைகளில் உங்களது முதலீடினை அதிகரிக்கலாம். அதனையும் சுகன்யா திட்டத்தில் செய்வது போல, மாத மாதம் எஸ் ஐ பி மூலமாக கூட செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+