இன்றைய நவீன உலகில் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான வழிகளை மக்கள் தொடர்ந்து ஆராய்கின்றனர். இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவையாக இருப்பதால் லாபத்திற்கு உத்தரவாதம் தர முடியாது. ஆனால் அரசு திட்டங்களில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு பல நன்மையை வழங்குகிறது. அதில் வருமான வரி சலுகைகள் மற்றும் பாதுகாப்பான வருமானம் ஆகியவை அடங்கும்.
போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. அவற்றுள் சில திட்டங்கள் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் சுகன்ய சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம். இந்த திட்டத்தில் நாட்டில் உள்ள எந்த ஒரு குடிமகனும் தங்களுடைய 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு: சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டத்தில் சாமானியர்களும் தங்கள் பெண் குழந்தைக்காக முதலீடு செய்யும் வகையில் அரசு மிகக் குறைந்த அளவிலான முதலீட்டு தொகையை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு தனிநபர் தங்கள் மகளுக்காக ரூ.250 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரு நிதியாண்டுக்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் நாட்டிலேயே அரசு வழங்கும் திட்டங்களில் அதிக வட்டியை வழங்குவது SSY தான். SSY திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
முதிர்வுக்காலம்: மத்திய அரசின் இந்தத் திட்டம் இந்திய குடிமக்கள் தனது மகளின் எதிர்காலத்திற்காக சேமிக்க அனுமதிக்கிறது. இந்த திட்டத்தை எந்தத் தபால் அலுவலக கிளையில் வேண்டுமானாலும் திறக்கலாம். SSY திட்டத்தின் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள். ஆனால் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் போதுமானது. அதன் பிறகு மீதம் இருக்கும் 6 ஆண்டுகளுக்கு எந்தவித முதலீடும் செய்யாமலேயே வட்டி விகிதம் வழங்கப்படும்.
காலாண்டுக்கு ஒரு முறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அரசால் மாற்றியமைக்கப்படுகிறது. வட்டி அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது முதிர்ச்சி தொகை குறிப்பிட்ட விகிதத்தை பொறுத்து மாறுபடலாம். அதேபோல முதலீட்டு தொகை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு முன்னர் SSY கணக்கில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
வயது: எந்த ஒரு இந்தியக் குடிமகனும் 10 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைக்கு SSY கணக்கைத் திறக்க முடியும். உங்கள் மகள் பிறந்தடன் முதலீடு செய்யத் தொடங்கினால் மகளுக்கு 21 வயதாகும்போது கணக்கை முடித்துக் கொண்டு பணத்தை திரும்ப பெறலாம்.
71 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?: SSY திட்டத்தின் கீழ் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு 1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு அதிகபட்ச பலன் கிடைக்கும். முன்பே பார்த்தோம். SSY திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் என்று. எனவே ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்து வர 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக 22,50,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள்.
இதற்கு மொத்தமாக 49,32,119 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக 71,82,119 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். மேலே கூறப்பட்டுள்ள கணக்கீடுகளை நீங்களே ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
ஏனெனில் சிலர் ரூ.1.5 லட்சத்திற்கு பதிலாக அதற்கும் குறைவான தொகையை முதலீடு செய்ய விரும்பலாம். இதுபோன்ற நபர்களும் ஆன்லைன் கால்குலேட்டரில் 8.2% வட்டி, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்களோ? அந்த தொகை போன்ற விவரங்களை வழங்கினால் 21 வருடங்கள் கழித்து எவ்வளவு தொகை உங்கள் கைக்கு வரும் என்பதை பார்த்துக் கொள்ளலாம். வட்டி மற்றும் அசல் அனைத்தும் பிரித்து பொறுத்து காண்பிக்கப்படும். இதனால் தகவலறிந்து முதலீட்டு முடிவுகளை எடுத்து உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications