பெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..!

பெண் குழந்தைகளுக்கென மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.

பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரையில், முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை காக்கும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

வட்டி விகிதம் எவ்வளவு?

வட்டி விகிதம் எவ்வளவு?

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள். எனினும் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் தற்போதைய நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படுகிறது.

SSY கணக்கிற்கான வயது வரம்பு

SSY கணக்கிற்கான வயது வரம்பு

அரசின் இந்த சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கானது. ஆக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். இதற்கு வயது கட்டாயம் 10 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும். இந்திய குடிமகனான எந்தவொரு இந்தியரும் தங்களது பெண் குழந்தைகளுக்காக இந்த திட்டத்தினை தொடங்கிக் கொள்ளலாம்.

குறைந்தபட்சம் எவ்வளவு?

குறைந்தபட்சம் எவ்வளவு?


பெண் குழந்தைகளுக்கான இந்த சேமிப்பு திட்டமானது பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம். ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து குறைந்தது 15 வருடத்திற்கு இந்த தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.

எப்படி தொடங்குவது?

எப்படி தொடங்குவது?

இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலைகளை செய்கின்றன. ஆக அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். சில பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மூலமும் தொடங்கி கொள்ளலாம். இந்த கணக்கிற்கு மினிமம் தொகையாக ஆண்டுக்கு 250 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையேல் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

வரி சலுகை உண்டா?

வரி சலுகை உண்டா?

சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும், எந்தவொரு தொகையும் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

முன் கூட்டியே பணம் திரும்ப பெறலாமா?

முன் கூட்டியே பணம் திரும்ப பெறலாமா?

பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகு முன் கூட்டியே கணிசமான தொகையை இடையில் திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடங்கலாமா?

நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடங்கலாமா?

இடையில் நிறுத்தப்பட்ட இந்த சேமிப்பு திட்டத்திற்கு குறிப்பிட்ட தொகை அபாரதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ஆக ஒரு வேளை உங்களது கணக்கு தொடர முடியாமல் போனாலும், மீண்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இடையில் கணக்கினை முடித்துக் கொள்ளலாமா?

இடையில் கணக்கினை முடித்துக் கொள்ளலாமா?

சுகன்யா சம்ரிதொ யோஜனா திட்டத்தில் தொடங்கப்பட் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இடையில் கணக்கினை முடித்துக் கொள்ளலாம். எனினும் இது அக்கவுண்ட் ஹோல்டர் தீவிர ஆபத்தான நோய் அல்லது பாதுகாவலர் இறந்து விட்டால் இந்த கணக்கினை இடையில் முடித்துக் கொள்ளலாம்.

வேறு கிளைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்

வேறு கிளைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்

இந்தியாவில் உள்ள ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு, எங்கு வேண்டுமானாலும் மாற்ற முடியும். இதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் விணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்களது கணக்கு நிர்வகிக்கப்படும் சம்பந்தபட்ட கிளையில் கொடுக்க வேண்டும்.

கடன் வாங்க முடியாது?

கடன் வாங்க முடியாது?

எனினும் பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்திற்கு எதிராகவோ அல்லது பிணையமாகவோ வைத்து கடன் வாங்க முடியாது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 9.6 மாதங்களில் இரு மடங்காக மாறும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+