ஒருவர் தனது கிரெடிட் கார்ட் பில் தொகையாக ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக (Cash-ஆக) செலுத்தினால், அந்த பரிவர்த்தனையை வருமான வரித்துறை கவனிக்க வாய்ப்பு உள்ளது. ரூ.1 லட்சம் மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தால், அது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையாக கருதப்படலாம். இது கருப்புப் பணமாக (unaccounted money) இருக்கலாம் என சந்தேகம் எழலாம்.
உங்கள் வருமானத்துக்கு எது சரியானது..?: உங்கள் செலவுகளுக்குப் பின்புலம் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கேட்டறிய வாய்ப்புள்ளது. அதற்கு நீங்கள் சரியான விளக்கம் கொடுக்க முடியாவிட்டால், அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையும் எதிர்கொள்ள நேரிடும். பெரிய அளவு பண பரிவர்த்தனைகள் இருந்தால், அதை வங்கி மூலமாக செய்ய வேண்டும்.

ரொக்க பரிவர்த்தனைகளை தவிர்க்க வேண்டும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில், செலவுகளை நிரூபிக்க வேண்டும். ஒருவர் வருடத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டில் செலவிட்டால், வருமான வரித்துறை உங்களைக் கண்காணிக்கும். பெரிய பரிவர்த்தனைகள் துறையின் கவனத்தை ஈர்க்கக்கூடும். ஒருவர் தங்களது வங்கிக் கணக்கில் அதிக அளவில் ரொக்கமாக பணம் செலுத்தினால், அது வருமான வரித்துறையின் (Income Tax Department) கவனத்திற்கு வரக்கூடும்.
எவ்வளவு பணம் டெபாசிட் செய்தால் கவனிக்கப்படும்..?: ஒரு நபர் தனது வங்கிக் கணக்கில் ₹10 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாக பணம் செலுத்தினால், அது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையாக கருதப்படும். இந்த நிலைமையில், வருமான வரித்துறை உங்கள் கணக்கை விசாரிக்கலாம். ஆம். ₹50,000-க்கும் மேலான ரொக்க வணிக பரிவர்த்தனைகள் இருந்தால் கூட, வருமான வரித்துறை உங்களிடம் விவரங்களை கேட்கலாம்.
என்ன செய்ய வேண்டும் ..?: அதிகமான ரொக்க பண பரிவர்த்தனைகள் இருந்தால், அதை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். உங்கள் வருமானத்துக்கு ஏற்ற வகையில் பரிவர்த்தனைகள் இருக்க வேண்டும். வங்கியிலோ அல்லது வருமான வரித் துறையிலோ கேட்கப்பட்டால், சட்டபூர்வமான ஆதாரங்களை வழங்க தயாராக இருக்க வேண்டும். தனிப்பட்ட அல்லது வணிக நோக்கங்களுக்காக அதிக அளவு பணம் டெபாசிட் செய்யும் போது, நிதி ஒழுங்குகளை பின்பற்றுவது மிக முக்கியம். பதில் தர முடியாத அளவில் பணம் சேர்த்தால், பின்னர் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.
ரூ.10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்தால்: நீங்கள் ஒரு ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் ₹10 லட்சம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்திருந்தால், உங்கள் விவரங்கள் வருமான வரித் துறையிடம் சேரும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு நோட்டீஸ் (Notice) அனுப்பப்படும் நிலையை கூட உருவாக்கலாம்.
ரூ.30 லட்சத்திற்கும் மேல் சொத்து வாங்கினால்: நீங்கள் ஒரு வீடு, பிளாட் அல்லது நிலம் போன்ற சொத்துகளை ₹30 லட்சம் அல்லது அதற்கு மேல் கொடுத்து வாங்கினால், இந்த விவரங்கள் தானாகவே வருமான வரித் துறைக்கு அனுப்பப்படும். அந்த தொகைக்கு ஏற்ப வருமானம் இருந்ததா என்பதை அதிகாரிகள் சரிபார்க்கலாம். உங்கள் முதலீடுகள் மற்றும் பெரிய அளவிலான செலவுகள் அனைத்தும் பான்கார்டு (PAN) மற்றும் ஆதார் கார்டு மூலம் வருமான வரித்துறைக்கு இணைக்கப்பட்டிருப்பதால், தற்போது எல்லாம் கண்காணிக்கப்படுகிறது.
நீங்கள் ஒரு ஆண்டில் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ.2 லட்சத்துக்கும் மேல் செலவிட்டால், இந்த விவரமும் வருமான வரித் துறையிடம் பதிவு செய்யப்படும். உங்கள் வருமானம் இதற்கேற்ப இருக்கிறதா என அதிகாரிகள் கேட்க வாய்ப்பு இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications