வெறும் 100 ரூபாய் போதும்.. டாடா மியூச்சுவல் பண்ட் டக்கரான அறிவிப்பு..!

பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் ( மியூச்சுவல் பண்டுகள்) வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் குறைவு மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வது காலப்போக்கில் செல்வத்தை குவிப்பதற்கான ஒரு சிறந்த உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. புதிய முதலீட்டாளர்கள் சரியான மியூச்சுவல் பண்டுகளின் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து, ஒழுக்கமான முறையில் முதலீடு செய்வது பலருக்கும் கடினமாக இருக்கலாம்.

வெறும் 100 ரூபாய் போதும்.. டாடா மியூச்சுவல் பண்ட் டக்கரான அறிவிப்பு..!

அவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் அல்லது காலாண்டு அடிப்படையில் சீரான இடைவெளியில் முதலீடு செய்ய அனுமதிக்கும் முறையான முதலீட்டு திட்டங்கள் (எஸ்.ஐ.பி.) இதற்கு உதவும்.

எஸ்ஐபி மூலம் மாதம் ரூ.100 கூட மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். இருப்பினும் சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட திட்டங்களில் முதலீட்டாளர்கள் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மியூச்சுவல் பண்டு தனது திட்டங்களில் எஸ்ஐபிக்கான குறைந்தபட்ச முதலீடு தொகையை ரூ.100ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் 100 ரூபாய் மற்றும் அதன் பன்மடங்கு தொகையை விருப்பப்படி முதலீடு செய்யலாம்.

டாடா மியூச்சுவல் பண்டு திட்டங்களில் ரூ.100 எஸ்ஐபி:

Tata Balanced Advantage Fund
Tata Banking and Financial Services Fund
Tata Business Cycle Fund
Tata Digital India fund
Tata Dividend Yield Fund
Tata Equity P/E Fund
Tata Equity Savings Fund
Tata Ethical Fund
Tata Flexi Cap Fund
Tata Focused Equity Fund
Tata Housing Opportunities Fund
Tata Hybrid Equity Fund
Tata India Consumer Fund
Tata India Pharma & Healthcare Fund
Tata Infrastructure Fund
Tata Large & Mid Cap Fund
Tata Large Cap Fund
Tata Mid Cap Growth Fund
Tata Multi Asset Opportunities Fund
Tata Quant Fund
Tata Resources & Energy Fund
Tata Small Cap Fund

டாடா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்
டாடா வங்கி மற்றும் நிதி சேவைகள் ஃபண்ட்
டாடா பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்
டாடா டிஜிட்டல் இந்தியா ஃபண்ட்
டாடா டிவிடெண்ட் ஈல்ட் ஃபண்ட்
டாடா ஈக்விட்டி பி/இ ஃபண்ட்
டாடா ஈக்விட்டி சேவிங்க்ஸ் ஃபண்ட்
டாடா எத்திகல் ஃபண்ட்
டாடா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
டாடா ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்
டாடா ஹவுசிங் ஆப்பர்சூனிட்டி ஃபண்ட்
டாடா ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட்
டாடா இந்தியா கன்ஸ்யூமர் ஃபண்ட்
டாடா இந்தியா பார்மா & ஹெல்த்கேர் ஃபண்ட்
டாடா இன்பராஸ்டக்சர் ஃபண்ட்
டாடா லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட்
டாடா லார்ஜ் கேப் ஃபண்ட்
டாடா மிட் கேப் வளர்ச்சி நிதி
டாடா மல்டி அசெட் வாய்ப்புகள் நிதி
டாடா குவாண்ட் ஃபண்ட்
டாடா வளங்கள் மற்றும் எரிசக்தி நிதி
டாடா ஸ்மால் கேப் ஃபண்ட்

இந்த மாற்றங்கள் டிசம்பர் 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றத்தை நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு சேர்க்கை (addendum) தெரிவித்துள்ளது.

டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் திட்டங்களின் திட்டத் தகவல் ஆவணம் (எஸ்.ஐ.டி.) மற்றும் முக்கிய தகவல் குறிப்பாணை (கே.ஐ.எம்.) ஆகியவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்களை சேர்க்கை வெளிப்படுத்துகிறது. மேற்கூறிய திருத்தம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் டாடா மியூச்சுவல் பண்டு தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+