மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், ஃபண்டின் பின்னணியைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், முந்தைய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட வருமானம் எதிர்காலத்திலும் தொடருமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த வகையில், டாடா மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சிறந்த வருமானம் தரும் திட்டங்களில் ஒன்றாகும். மாதம் ரூ.10,000 சேமிப்பு பத்து ஆண்டுகளில் ரூ.38 லட்சம் வருமானம் கொடுத்துள்ளது.
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய பயப்படுபவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த வழி. மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஈக்விட்டிகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறலாம். மேலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முதலீட்டை திரும்பப் பெறலாம். கடந்த சில ஆண்டுகளாக பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல வருமானத்தை அளித்து வருகின்றன. இதனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மூலம் சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபண்டுகளின் பின்னணியை கவனமாகச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். கடந்த கலத்தில் நல்ல வருமானம் கொடுத்த திட்டங்கள் நல்ல வருமானத்தை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில்தான், டாடா மியூச்சுவல் ஃபண்டுகளின் 'டாடா மிட்கேப் க்ரோத் ஃபண்ட் நேரடித் திட்டம்' வருமானப் பங்கீட்டில் மேஜிக் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் எஸ்ஐபி முதலீட்டில் 19.37% வருமானத்தை அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 32.67% வருமானம் கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி ஆண்டு வருமானம் 29.22%. கடந்த 5 ஆண்டுகளில் 27.65% ஆண்டு சராசரி வருமானத்தை அளித்துள்ளது.
மாதாந்திர சேமிப்பான ரூ.10 ஆயிரம் மூலம் ரூ.38 லட்சம் சம்பாதிப்பது எப்படி?: டாடா மிட்கேப் குரோத் ஃபண்ட் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 20.01% ஆண்டு வருமானத்தை அளித்துள்ளது. டிசம்பர் 2014 முதல், மாதம் ரூ.10,000 என தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் மொத்தச் சேமிப்பு ரூ.12 லட்சமாக இருக்கும். இந்தத் தொகையில், வட்டி மற்றும் கூட்டு வட்டியைக் கணக்கிட்ட பிறகு மொத்த லாபம் ரூ.26.48 லட்சமாக இருக்கும். இப்போது உங்களுக்கு மொத்தம் ரூ.38.48 லட்சம் கிடைத்திருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications