ஒவ்வொருவரும் தங்களது பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வருமானம் சம்பாதிக்க எதிர்பார்த்து கொண்டிருப்போம். அதுவும் நம்மிடம் உள்ள பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் போட்டு வைத்தால் அதிக வட்டி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிறைய பேர் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் பணம் போடுவதும் உண்டு. ஆனால் அதிகபட்ச வட்டியை எந்த வங்கி கொடுக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில்லை. அந்த வகையில், நாட்டின் நம்பகமான முன்னணி நிறுவனமான டாடா ஃபிக்ஸ்ட் டெபாசிட் சேவையை கொண்டுவந்துள்ளது.
டாடா என்றாலே நமக்கு நியாபகம் வருவது சமீபத்தில் மறைந்த ரத்தன் டாடா அவர்கள் தான். இந்தியா பல்வேறு வகையான நன்மைகள் இவர் மூலம் கண்டுள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் டாடா எதிலாவது ஒன்றில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அவை அனைத்தையும் நமக்கு கொடுத்து சென்றவர்தான் ரத்தன் டாடா. அனைத்து மக்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து வணிகத்தில் விலை குறைந்த பொருட்களை அறிமுகம் செய்து விட்டு சென்றுள்ளார்.

அந்த வகையில், அறிமுகம் செய்யப்பட்டது தான் டாடா நியூ என்ற செயலி. அனைத்து டாடா வணிகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. அதில் தற்போது முக்கிய சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.1000 முதலீட்டை தொடங்கினால் சுமார் 9.1% வரை வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தையில் டாடா மியூச்சுவல் ஃபண்டுகள் சிறப்பான ஏற்றத்தை கொடுத்து வரும் நிலையில், அனைவருக்கும் உதவும் விதமாக டாடா ரீடெயில் நிறுவனம் குறைந்த விலையில் 9.1% வட்டியும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் சந்தையில் டாடா நியூ சிறப்பான ஒரு ஆதரவை பெற்றுள்ள நிலையில், பண சேமிப்பு தொடர்பான அதன் வாடிக்கையாளர்களுக்கு பல நிதி தயாரிப்புகள் மற்றும் சில்லறை கட்டண வசதிகளை வழங்கி வருவதுடன் ஃபிக்ஸட் டெபாசிட் சேவையையும் வழங்க உள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கு தொடங்காமலே டாடா நியூ மூலம் பல்வேறு வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு 9.1 சதவீத வட்டி விகிதத்தில் முன்னணி நிதி நிறுவனங்களின் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (நிதிச் சேவைகள்) கவுரவ் ஹஸ்ரதி கூறுகையில், பல நம்பகமான வங்கிகள் மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் இத்திட்டத்தில் நீங்கள் வெறும் 1,000 ரூபாயில் கூட முதலீட்டை தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், வாடிக்கையாளர்கள் பல்வேறு முதலீட்டு விருப்பங்களுடன் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி திட்டங்களில் முதலீடு செய்யலாம். அதன்படி, சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFCs) தேர்வு செய்யலாம்.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்: முதலாவதாக யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1001 நாட்கள் எஃப்டி திட்டத்திற்கு 9.00% வட்டியை வழங்குகிறது.
அதேபோல், நார்த்ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 566 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 9.00% வட்டியை வழங்குகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் பைனாஸ் வங்கி 888 நாட்கள் எஃப்டி திட்டத்திற்கு 8.25% வட்டியை வழங்குகிறது.
ஜன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டி திட்டத்திற்கு 8.25% வட்டியை வழங்குகிறது.
சூர்யோதயா ஸ்மால் பைனான்ஸ் வங்கி 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்டி திட்டத்திற்கு 8.60% வட்டியை வழங்குகிறது.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி 12 மாதங்கள் வரையிலான எஃப்டி திட்டத்திற்கு 8.25% வட்டியை வழங்குகிறது.
அதேபோல், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை தவிர முன்னணி வங்கிகள், தனியார் மற்றும் பொது நிறுவனங்களும் 8% மேல் ஃபிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி வழங்குகின்றன.
மார்ச் 2019 இல் நிறுவப்பட்ட டாடா டிஜிட்டல், நுகர்வோரை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது. அதன் முக்கிய செயலியான டாடா நியூ மளிகை சாமான்கள், மருந்துகள், பில் செலுத்துதல்கள், யுபிஐ பில் செலுத்தல்கள், பரிசு அட்டைகள் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
டாடா டிஜிட்டல் ஆனது ஆனது பிக்பாஸ்கட், குரோமா, டாடா 1MG, டாடா CLiQ மற்றும் டாடா பேமெண்ட்ஸ் போன்ற துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. மேலும் விவரங்கள் www.tatadigital.in இல் கிடைக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications