இதுமட்டும் நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டால்.. பட்டாசு வெடித்து கொண்டாடலாம்..!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 2024 ஜூன் 9ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். ஜூலை 23ம் தேதியன்று மோடி 3.0 அரசு முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதிலிருந்து 6 மாதங்கள் தாண்டிய நிலையில், பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில் தங்களுக்கு சாதகமான அறிவிப்பு எதுவும் வராதா என்று பல்வேறு தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். குறிப்பாக வரி விகிதங்களில் குறைப்பு, 80 சி உச்சவரம்பு உயர்வு போன்றவற்றை வரி செலுத்துவோர் எதிர்பார்க்கின்றனர்.

வருமான வரிச்சட்டம் பிரிவு 80சி கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது. இதன்படி, பிக்சட் டெபாசிட், இஎல்எஸ்எஸ் மற்றும் வீட்டுக் கடன் அசல் ஆகியவற்றில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.5 லட்சம் வரை செய்யும் முதலீடுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இதுமட்டும் நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டால்.. பட்டாசு வெடித்து கொண்டாடலாம்..!!

பிரதமர் நரேந்திர மோடி முதல் பதவி காலத்தில், 80சி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. 2014ல் மத்திய நிதியமைச்சராக மறைந்த அருண் ஜெட்லி இருந்தபோது 80சி விலக்கு வரம்பில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த பத்தாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யவில்லை. இடைப்பட்ட காலத்தில் பணவீக்கமும் உயர்ந்து விட்டது.

இதனால் பல வரி செலுத்துவோர், பிக்சட் டெபாசிட், இஎல்எஸ்எஸ் மற்றும் வீட்டுக் கடன் அசல் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான தற்போதைய வரம்பான ரூ.1.5 லட்சம் என்பது மிகவும் குறைவு மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாக கருதுகின்றனர்.

அதேசமயம் தற்போது பிரிவு 80சி விலக்கு வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்துவதற்கான திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக தகவல். இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டால், வரி செலுத்துவோருக்கு கூடுதல் விலக்குகளை பெற்று பயன் அடைவர் மற்றும் வரி முறையின் ஈர்ப்பை அதிகரிக்கும்.

பர்சனல் டேக்ஸ் அட் 1 பைனான்ஸின் நியாதி ஷா கூறுகையில், பிரிவு 80சி விலக்கு வரம்பை உயர்த்தினால், தகுதியான திட்டங்களில் அதிக சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும். தற்போது மருத்துவ செலவினங்கள் அதிகரித்து வருவதால், 80டி கீழ் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான விலக்கு வரம்பையும் மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று தோன்றுகிறது என்று தெரிவித்தார்.

வருமான வரிச்சட்டம் பிரிவு 80டி-ன் படி, வரி செலுத்துவோர் மருத்துவ காப்பீட்டுக் பாலிசிகளுக்கு செலுத்தும் பிரீமியங்களில் விலக்குகளை கோரலாம். இதன் மூலம் தங்கள் வரி பொறுப்பை குறைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்காக, உங்கள் மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோருக்கான மருத்துவ காப்பீட்டுக்காக செலுத்தப்படும் ரூ.25,000 வரையிலான பிரீமியங்களுக்கு வரி விலக்கு கோரலாம்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+