டேர்ம் இன்சூரன்ஸ் வாங்கினா மட்டும் போதாது! இந்த 5 விஷயத்தை தப்பித் தவறி செஞ்சிடாதீங்க!

தங்களின் மறைவுக்கு பின்னர் தங்கள் குடும்பம் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள கூடாது என்று நினைப்பவர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி பெறுகின்றனர். டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது பாலிசி வாங்குபவர் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியோருக்கு இடையே குறிப்பிட்ட காலம் வரை போடப்படும் ஒப்பந்தமாகும். அந்த காலத்திற்குள் பாலிசி வாங்குபவர் இறந்துவிட்டால் அவர் சொன்ன நாமினிக்கு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கும்.

உதாரணமாக ஒரு நபருக்கு ரூ.50 லட்சம் ஹோம் லோன் இருக்கிறது. ரூ.30 லட்சம் கார் லோன் இருக்கிறது. அதோடு குழந்தைகளின் கல்வி போன்ற பிற செலவுகளும் இருந்தால் அவர் ரூ.2 கோடி மதிப்பிலான டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை துரதிஷ்டவசமாக அந்த நபர் இறந்து போனால் அவருடைய குடும்பத்தினர் கடனை அடைக்கவும், செலவுகளை சமாளிக்கவும் இந்த இன்சூரன்ஸ் உதவியாக இருக்கும். டேர்ம் இன்சூரன்ஸ் எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் சில காரணங்களால் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

டேர்ம் இன்சூரன்ஸ் வாங்கினா மட்டும் போதாது! இந்த 5 விஷயத்தை தப்பித் தவறி செஞ்சிடாதீங்க!

பாலிசி பெற்றவர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டார். அவருடைய நாமினி கிளைம் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறார். அந்த சூழ்நிலையில் கீழ்காணும் காரணங்கள் இருந்தால் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

நோய்களை மறைப்பது: பாலிசி பெறுபவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சினைகள் இருந்து அவற்றை மறைத்து அவர் பாலிசி வாங்கி இருந்தால் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Also Read

தவறான நாமினி விவரங்கள்: பாலிசி வாங்கும்போது நாமினியை நியமிக்க வேண்டும். அப்போது நாமினி குறித்த தவறான தகவல்களை வழங்கினாலோ அல்லது தகவல்கள் முழுமை பெறாமல் இருந்தாலோ கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

பிரீமியம் தொகையை தவறவிடுவது: பாலிசி வாங்கிய பிறகு பிரீமியம் தொகையை சரியாக செலுத்த வேண்டும். பாலிசி காலாவதியாகிவிட்டால் குடும்பத்திற்கு எந்த ஒரு காப்பீடும் கிடைக்காது.

காப்பீட்டில் வராத விஷயங்கள்: பாராகிளைடிங், பந்தயம் போன்ற ஒரு சில ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு அப்போது ஏற்படும் மரணங்கள் பாலிசி விதிகளின் கீழ் வராமல் போகலாம். இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் இறந்திருந்தால் அப்போது அவருடைய குடும்பத்திற்கு காப்பீடு கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மறைத்தல்: பாலிசி பெற்றவர் கர்ப்பமாக இருந்து சரியான தகவல்களை வழங்காமல் மறைத்து காப்பீடு வாங்கி இருந்து.. பிரசவத்தின் போது எதிர்பாராத விதமாக மரணித்தால் அப்போதும் அவருடைய நாமினி கிளைம் பெறுவதில் பிரச்சனை ஏற்படும். எனவே பாலிசி வாங்க படிவத்தை நிரப்பும் போதே துல்லியமான விவரங்களை வழங்குவது அவசியம்.

உங்கள் உடல்நிலை குறித்த தகவல்கள் உங்களுக்கு தெரியாவிட்டால் பாலிசி வாங்குவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து சரியான தகவல்களை வழங்குவது அவசியம்.

எவ்வளவு இன்சூரன்ஸ் தேவை?: டேர்ம் இன்சூரன்ஸ் பெறுவது என்பது ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 முதல் 15 மடங்கு தொகையை பெறுவது நல்லது. ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. ஏனெனில் ஒருவரின் கடன், எதிர்காலச் செலவு மற்றும் பிற விஷயங்களையெல்லாம் பொறுத்து தான் பாலிசியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+