டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களில் பாலிசி எடுப்பதன் மூலம் குறைந்த பிரீமியத்தில் அதிக பயன் அளிக்கும். ஆனால் இது பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மட்டுமே கவரேஜ் கிடைக்கும்.
பாலிசிதாரர்கள் தங்களுடைய மாத வருமானத்தில் 15% தொகையை டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று இன்சூரன்ஸ் ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
இது கொரோனாவின் காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில், 2022ம் நிதியாண்டில் தொடக்கத்தில் இருந்து டெர்ம் இன்சூரன்ஸ்களுக்கான பிரீமிய தொகை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி பாதையில் இன்சூரன்ஸ் துறை
டெர்ம் இன்சூரன்ஸ் மட்டும் அல்ல., இந்த கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறையும் சுறுசுறுப்பாக இயங்கியது எனலாம். ஏனெனில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாரும் அறியாத நிலையில், மக்கள் அச்சத்திலேயே பலர் இன்சூரன்ஸ் திட்டங்களை தேடினர். சிலர் தங்களது பழைய பாலிசிகளை தேடிப்பிடித்து புதுபித்தனர். அப்படி புதுபித்த பிரீமியம் தொகையானது கணிசமான வளர்ச்சியினையும் கண்டது.
அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல்
இந்த நிலையில் தற்போது இந்தியா உட்பட பல நாடுகளிலும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வரும் நிலையில், இன்னும் பாதிப்புகள் அதிகம் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இது இந்தியா மட்டும் அல்ல பல நாடுகளிலும் இன்சூரன்ஸ் பிரீமிய கட்டணங்கள் உயர்ந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திட்டம்
எனினும் இந்த பிரீமிய உயர்வினை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் அதிகரிக்க உள்ளதாக தெரிகிறது. பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யில் இந்த அதிகரிப்பு விகிதம் இல்லை என கூறப்படுகிறது. இது ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எடுத்த இன்சூரன்ஸ்தாரர்களுக்கு இது கையை கடிக்கும் எனலாம்.
எவ்வளவு அதிகரிக்கலாம்?
ஏனெனில் இனி ஏற்கனவே செலுத்திய தொகையை விட, அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும். அப்படி இல்லை எனில் க்ளைம் விகிதம் குறைவாக இருக்கும்.
கொரோனா காலத்தில் ரிஸ்க் அதிகம் இருப்பதால் இந்த பிரீமிய அதிகரிப்பினை செய்யவுள்ளதாக தனியார் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. அதோடு இந்த விகிதமானது 15 - 20% இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications