சூப்பர்.. சிகரெட்டை விட்டால் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தில் 80 சதவீதம் கட்

சிகரெட் குடிப்பது உங்கள் உடல்நலத்துக்கு மட்டுமல்ல; பர்ஸ் நலத்துக்கு நல்லதல்ல. எப்போதோ ஒரு சிகரெட் குடிப்பதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது. ஆனால் அதுவே மோசமான பழக்கமாகிவிட்டால் காலப்போக்கில் பெரும் செலவீனமாகிவிடும். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சிகிச்சை செலவுகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. உங்கள் லைப் இன்ஸ்சூரன்ஸ் பிரீமியத்தையும் பாதித்து விடும்.

ஆமாங்க. லைப் இன்ஸ்சூரன்ஸ் பாலிசியை சிகரெட் குடிக்கும் பழக்கம் உள்ள நீங்கள் வாங்கும்போது சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லாத உங்கள் நண்பரை விட அதிகமாக பிரீமியம் செலுத்த நேரிடும்.

சூப்பர்.. சிகரெட்டை விட்டால் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தில் 80 சதவீதம் கட்

லைப் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தை உங்களது சிகரெட் பழக்கம் எந்தளவுக்கு பாதிக்கும் என்பது பற்றியும் கவரேஜுக்காக நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், உங்கள் மீதான சுமையைக் குறைப்பது எப்படி என்பதையும் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

சிகரெட் குடிப்பவர்கள் கிரிட்டிகல் இல்னெஸ்களுக்கு ஆளாகி இளம் வயதிலேயே உயிரிழப்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத விஷயமில்லை.
புகையிலை பழக்கம் இருப்பவர்கள் இதய நோய்கள், நுரையீரல் கேன்ஸர், சுவாசப் பிரச்னைகள் தொடர்பான நோய்களுக்கு ஆளாகுவர். இதனால் சிகரெட் குடிப்பவர்களை அதிக அபாயத்துக்கு ஆளாகும் நபர்கள் என்று இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

சிகரெட் குடிப்பவர்கள் தான் நிறைய அளவில் இன்ஸ்சூரன்ஸ் தொகையை கேட்கும் நிலைக்கு ஆளாகின்றனர் என்று இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. பொதுவாக, நீங்கள் சிகரெட் குடிப்பவரா என்பதை அறிய சில குறிப்பிட்ட கேள்விகளை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் முன்வைப்பார்கள்.

பீடி, சிகரெட், சுருட்டு, குட்கா, சுவைக்கும் புகையிலை போன்றவற்றின் மூலம் ஏதாவது வகையில் நிக்கோடீனை புகையிலை பழக்கம் உள்ளவர்கள் எடுத்துக் கொள்கின்றனர் என்று இன்ஸ்சூரன்ஸ் தேகோ நிறுவன துணைத் தலைவர் பங்கஜ் கோயங்கா கூறுகிறார்.
நிக்கோடீன் பேட்ஜ் அல்லது கம் பயன்படுத்தினாலும் ஒருவர் புகைப்பிடிப்பவராகத்தான் கருதப்படுவார்.

நீங்கள் புகைப்பிடிப்பவரா என்பதை கண்டறிய இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட கேள்விகளை கேட்கும்- நீங்கள் நிக்கோடீன் அல்லது புகையிலை பொருட்களை உட்கொள்பவரா? நீங்கள் புகை பிடிப்பீர்களா? கடந்த 5 ஆண்டுகளில் புகையிலை தயாரிப்புகளை உட்கொண்டீர்களா? நீங்கள் எப்போதாவது புகையிலை பொருட்களை உட்கொண்டீர்களா? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ஆம் என்று பதிலளித்துவிட்டால் உங்களுக்கு புகைப்பழக்கம் இருப்பது உறுதி செய்யப்படும். இதைத் தொடர்ந்து நீங்கள் அதிக அபாயம் உள்ளவர்கள் என முத்திரையிட்டு உங்களது பிரீமியம் அதிகமாக்கப்படும்.
கூடுதல் பிரீமியம் எவ்வளவு?

இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொருத்து பாலிசிக்குக் கூடுதல் பிரீமியம் கட்ட நேரிடும். பொதுவாக புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே 30 சதவீதம் கட்டண வித்தியாசம் இருக்கும். புகைப்பிடிப்பவர்கள் கிரிட்டிகல் இல்னெஸ்களுக்கு ஆளாகி அவர்களது ஆயுட்காலம் குறைந்து விடலாம் என்பதால்தான் இந்த நிலை. ஒருவேளை புகைப்பிடிப்பவர்கள் 50-80 சதவீதம் வழக்கத்தைவிட கூடுதல் பிரீமியம் செலுத்த நேரிடலாம்.

எடுத்துக்காட்டாக, 28 வயதான ஒருவர் ஹெச்டிஎப்சி லைப் கிளிக் டூ புரொட்டெக்ட் லைப் ரூ.50 லட்சத்துக்கான 30 வருட டெர்ம் கவரேஜுக்கு ஆண்டுக்கு ரூ.11,385 பிரீமியம் செலுத்த வேண்டும். அதே பாலிசிக்கு 28 வயதான புகைப்பிடிப்பவர் 58 சதவீதம் கூடுதலாக ரூ.17,949 ஆண்டு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதுபற்றி செக்யூர்நௌ இன்ஸ்சூரன்ஸ் புரோக்கர் நிறுவன இணை நிறுவனர் கபில் மேத்தா கூறுகையில், புகைப்பிடிப்பவரைப் பொறுத்து கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றாலும் பொதுவாக 50 சதவீதம் பிரீமியம் கட்டணம் அதிகமாகவே செலுத்த வேண்டியிருக்கும்.

புகைப்பிடிப்பவர்களை எப்போதாவது குடிப்பவர் அல்லது வழக்கமாகக் குடிப்பவர் என்றெல்லாம் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் வகைப்படுத்துவதில்லை. எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் டெர்ம் இன்ஸூரன்ஸுக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தத்தான் வேண்டும்.

விழாக்காலங்களில் பொழுதுபோக்குக்காக புகைப்பிடித்துவிட்டு அதை மறைத்து அந்தப் பழக்கம் இல்லை என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

ஆன்லைன் மூலம் டெர்ம் கவர்களை வாங்கினால் நீங்கள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுடன் சட்டப்படியான ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டீர்கள் என்று அர்த்தம். புள்ளிவிவரமாகத் துல்லியமானத் தகவல்களை நீங்கள் தரவேண்டியிருக்கும். பாலிசி எடுக்கும்போது நீங்கள் பொய் சொல்லியிருந்தால் உங்கள் மீதான நன்மதிப்பு கோட்பாட்டுக்கு நீங்கள் பங்கம் செய்துவிட்டதாகக் கருதப்படும்.

ஏனென்றால் நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கும். நீங்கள் பொய் சொன்னது தெரிய வந்தால் பாலிசி காலத்துக்கு இடையே அதை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் ரத்து செய்ய நேரிடும். கஷ்டப்பட்டு நீங்கள் செலுத்திய பிரீமியத்துக்குப் பலன் இல்லாமல் போய்விடும். எனவே தொடக்கத்திலேயே உண்மையைச் சொல்லி விடுங்கள்.

புகைப்பழக்கம் பற்றிய கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறிவிடுங்கள். இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் நீங்கள் இப்போது புகைப்பிடிக்கிறீர்களா என்று கேட்டால் நீங்கள் முன்பே குடித்திருக்கிறீர்களா என்று அர்த்தம்.

உண்மையைச் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் உங்களுக்கு கோடினின் ரத்த டெஸ்ட்டை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்யும்.
பாலிசி வாங்கியபின் புகைப்பழக்கத்தை நிறுத்தினால் பிரீமியம் கட்டணம் குறையுமா?

இல்லை. இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்களது டெர்ம் இன்ஸ்சூரன்ஸ் நிலையை பாலிசி காலத்தில் புகைப்பழக்கம் உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்று பார்த்து மாற்றாது. எனவே உங்களது பிரீமியம் கட்டணத்தில் மாற்றங்கள் நிகழுவதற்கு வாய்ப்பில்லை என்று கோயங்கா கூறுகிறார்.
ஒருமுறை பிரீமியம் நிர்ணியித்து பாலிசிதாரர்கள் செலுத்திவிட்டால் அதன்பின்னர் பிரீமியத்தில் மிக அரிதாகவே மாற்றங்கள் இருக்கும்.

சில நிறுவனங்கள் புகைப்பழக்கத்தை விட்டால் பிரீமியம் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கின்றன. இதற்கு சில மருத்துவப் பரிசோதனைகளை பாலிசிதாரர்கள் மேற்கொள்ள நிறுவனங்கள் கட்டுப்பாடு வைக்கும்.
இருப்பினும் புகைப்பழக்கத்தை உங்களால் விடமுடிந்தால் ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருந்த பின்னர் புதிய டெர்ம் இன்ஸ்சூரன்ஸ் பாலிசியை புகைப்பழக்கம் இல்லாதவர் என்ற முறையில் நீங்கள் பெறலாம். இதற்கு குறைந்த பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்று புரோபஸ் இன்ஸ்சூரன்ஸ் புரோக்கர் கோயல் கூறுகிறார்.

எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொருத்து காத்திருப்புக் காலம் மாறுபடும். ஆனால் பொதுவாக பாலிசிதாரர்கள் 12 மாதங்களாவது காத்திருக்க நேரிடும். சில நிறுவனங்கள் 12 மாதங்கள் முதல் 5 வருடங்கள் வரை காத்திருக்க வைக்கின்றன.

பாலிசி வாங்கியபிறகு சிகரெட் பழக்கம் வந்தால் கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டுமா?
புகைப்பழக்கம் இல்லாதவர் என்ற வகையில் டெர்ம் கவரேஜ் பெற்று பின்னர் புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உங்களது பாலிசி பிரீமியத்தில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் அதுபற்றி இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தகவல் தந்துவிடுவது பாதுகாப்பாகும். ஏனென்றால் பாலிசி தொகையைக் கோரும் சமயத்தில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிக்கலாகிவிடும் என்று கோயல் எச்சரிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+