ரூ.1 கோடி இலக்கை அடைய உதவும் 8-4-3 விதி..!! மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களே கவனம்..!!

சம்பள பணத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இவ்வாறு முதலீடு செய்யும் போது சில விஷயங்களை பின்பற்றினால் போதும் எளிதாக நம் நிதி இலக்கை எட்டிவிட முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்டகால அடிப்படையில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது, காம்பவுண்டிங் முறையில் தான் நம் பணம் பன்மடங்கு பெருகுகிறது. சராசரியாக 12% வருடாந்திர லாபத்தை அடிப்படையாக கொண்ட ஒரு திட்டத்தில் முதலீடு செய்து , எளிதாக எப்படி 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டலாம் என்பதை நாம் விரிவாக பார்க்கலாம்.

ரூ.1 கோடி இலக்கை அடைய உதவும் 8-4-3 விதி..!! மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்களே கவனம்..!!

இதற்காக நாம் 8-4-3 என்ற காம்பவுண்டிங் விதிமுறையை தான் பயன்படுத்த போகிறோம். இதன் படி 15 ஆண்டு கால முதலீட்டை 8 ஆண்டுகள், 4 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என மூன்று பிரிவுகளாக பிரித்து கொள்ளலாம். நம் முதலீடு இதில் எப்படி வளர்ச்சி அடையும் என கணக்கிடலாம்.

முதல் 8 ஆண்டுகள்: முதலீட்டின் முதல் 8 ஆண்டுகளில், நாம் வழக்கம்போல தொடர்ந்து எஸ்ஐபி தொகையை செலுத்தி வருவோம். ஆரம்ப காலத்தில் நமது முதலீட்டு தொகை குறைவாக இருப்பதால், நமது முதலீட்டின் வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும்.

இந்த காலகட்டத்தில் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே இருப்பது போல் தோன்றும். பலரும் இந்த ஆரம்ப கால மந்தமான வளர்ச்சியை பார்த்து முதலீட்டை பாதியிலேயே நிறுத்திவிடுவது உண்டு. ஆனால், இது தான் நமது 1 கோடி ரூபாய்க்கான வலுவான அடித்தளம்.

Also Read

9 முதல் 12 ஆண்டுகள் : முதல் 8 ஆண்டுகள் முதலீட்டை தொடர்ந்தால் அடுத்த 4 ஆண்டுகளில் அதாவது 9 முதல் 12ஆவது ஆண்டு வரை நம் முதலீட்டின் வளர்ச்சி வேகம் எடுக்க தொடங்கும். இந்த கட்டத்தில்தான், நாம் முன்பு முதலீடு செய்த பணமும், அதிலிருந்து கிடைத்த லாபமும் சேர்ந்து இரட்டிப்பு வேகத்தில் வளர தொடங்கும்.

13 முதல் 15 ஆண்டுகள் : இறுதி 3 ஆண்டுகளில் அதாவது 13 முதல் 15-வது ஆண்டு வரை நம் முதலீட்டின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமானதாக மாறும். நாம் முதலீடு செய்த ஒட்டுமொத்த தொகையில் பெரும் பகுதியான லாபம் அதாவது 50% வரையிலான லாபம் இந்த கடைசி சில ஆண்டுகளில் மட்டுமே கிடைக்கும். ஒட்டுமொத்த முதலீட்டு பயணத்தின் கடைசி 20 சதவீத காலக்கட்டத்தில் தான் மிகப்பெரிய செல்வம் உருவாகிறது.

Recommended For You

எனவே மாதம் தோறும் 20000 ரூபாய் பணத்தை சுமார் 12% வருடாந்திர லாபம் தரும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், உங்களால் எளிதாக 1 கோடி ரூபாயை எட்ட முடியும்.

இந்த உதாரணத்தில், கடைசி 3 ஆண்டுகளில் அதாவது 12-வது ஆண்டிலிருந்து 15-வது ஆண்டுக்குள் உங்கள் போர்ட்ஃபோலியோ மதிப்பு சுமார் 64 லட்சத்திலிருந்து திடீரென 1 கோடிக்கும் அதிகமாக வளர்ச்சி அடையும். அதாவது 3 ஆண்டு காலத்தில் மட்டும் சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமான லாபம் காம்பவுண்டிங் மூலமாக மட்டுமே கிடைக்கும்.

எனவே முதல் சில ஆண்டுகளில் வளர்ச்சி குறைவாக இருக்கிறது என்று பயந்து பாதியிலேயே எஸ்ஐபி-ஐ நிறுத்த கூடாது. குறைந்தபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை முதலீட்டை நீட்டித்தால் மட்டுமே அதன் முழுமையான பலன் கிடைக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+