மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான சுழற்சி மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான சுழற்சி என ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி திருத்தப்படுகிறது. பொதுவாக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில ஒரு உயர்வையும், அக்டோபர் அல்லது நவம்பரில் இரண்டாவது உயர்வையும் அறிவிக்கும்.
பணவீக்கம்
நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு அடிப்படையில் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி கடைசியாக 2 சதவீதம் மட்டுமே அதிகரிக்கப்பட்டது. இது சுமார் 78 மாதங்களில் மிகக் குறைந்த உயர்வு ஆகும். 2025 ஜனவரி-ஜூன் சுழற்ச்சிக்கான சமீபத்திய அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு தற்போது, மொத்த அகவிலைப்படி 55 சதவீதமாக உள்ளது.

ஜனவரி-ஜூன் சுழற்ச்சிக்கான அகவிலைப்படி உயர்வு பெரிய அளவில் இல்லாததால், 1.2 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது ஜூலை-டிசம்பர் சுழற்சிக்கான அகவிலைப்படியில் அதிக உயர்வை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் வகையில், கடந்த மார்ச் மாதத்தில் அகில இந்திய தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் (CPI-IW) சிறிது அதிகரித்துள்ளது.
7வது ஊதியக்குழு
தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 மார்ச் மாதத்தில் CPI-IW இன்டெக்ஸ் 0.2 சதவீதம் உயர்ந்து 143ஆக உயர்ந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, டிஏ/டிஆர் உயர்வு CPI-IW-ன் 12 மாத சராசரியை எடுத்துக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
2025 மார்ச் வரையிலான சராசரியை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்ட அகவிலைப்படி 57.06 சதவீதத்தை எட்டியுள்ளது. CPI-IW எண்ணிக்கை ஏப்ரல், மே மற்றும் ஜூனில் நிலையானதாக இருந்தால் அல்லது சற்று அதிகரித்தால், இந்த சராசரி 57.86 சதவீதமாக உயரலாம். வழக்கமாக அகவிலைப்படி உயர்வு சதவீதம் அடுத்த முழு எண்ணாக முழுமையாக்கப்படும். அதாவது சராசரி 57.50 சதவீதத்துக்கு மேல் இருந்தால். அகவிலைப்படி 58 சதவீதமாக ஆக அதிகரிக்கலாம்.
அதிகரிப்பு உறுதி
அதேவேளையில் 57.50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால்,? அகவிலைப்படி 57 சதவீதமாக மட்டுமே இருக்க முடியும். இதன்படி பார்த்தால், ஜூலை சுழற்ச்சியில் அகவிலைப்படி 2 அல்லது 3 சதவீதம் அதிகரிப்பு உறுதியானதாக கருதப்படுகிறது. இது 7வது ஊதியக் குழுவின் கீழ், திட்டமிடப்பட்ட கடைசி அகவிலைப்படி உயர்வாகும்.
2025 டிசம்பர் 31ம் தேதியன்று 7வது ஊதியக்குழு தனது பதவிக் காலத்தை முடிக்கும். இது 8வது ஊதியக் குழு அமலுக்கு வருவதற்கு வழிவகுக்கும். இருப்பினும் முதலில் எதிர்பார்த்தப்படி, 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி முதல் செயல்படுத்துவதற்கு சாத்தியமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications