முதலீட்டில் பெரிய லாபங்களை ஈட்ட அதிகப் பணம் தேவையில்லை. மாறாக, சரியான நேரத்தில் தொடங்குவதே முக்கியம். தொடக்கத்தில் சிறிய தொகையாக இருந்தாலும், காலப்போக்கில் அது பெரிய செல்வமாக மாறும். இந்த அதிசயத்தை "கூட்டு வட்டி" (Compounding) உருவாக்குகிறது.
பெரும்பாலானோர் முதலீடு செய்ய பெரிய தொகை தேவை என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் முதலீட்டின் அளவைவிட, முதலீடு செய்யத் தொடங்கும் காலமே மிக முக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு காலம் உங்கள் பணம் வளர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதனால் கிடைக்கும் பலன்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.

ஃபண்ட்ஸ்இந்தியா (FundsIndia) அறிக்கை இதனை தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. இதன்படி 20 வயது தொடாங்கி 55 வயது வரை எந்தெந்த வயதில் முதலீட்டு பயணத்தை தொடங்கினால் 60 வயதாகும் போது எவ்வளவு பணம், கிடைக்கும் என்பதை தெளிவாக இந்த அறிக்கை நமக்கு விளக்குகிறது. ஆண்டுக்கு 12% லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் அந்த பணம் எவ்வளவு உயரும் என்பதை உதாரண்மாக கூறியுள்ளது.
இதன்படி நீங்கள் 20 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில் உங்கள் பணம் 93 மடங்கு அதிகரிக்கும். 25 வயதில் தொடங்கினால், 53 மடங்கு; 30 வயதில் தொடங்கினால், 30 மடங்கு; 35 வயதில் தொடங்கினால், 17 மடங்கு என உயர்வு கண்டிருக்கும்.இதுவே நீங்கள் 40 வயதில் தொடங்கினால், 10 மடங்கு; 45 வயதில் தொடங்கினால், 5.5 மடங்கு; 50 வயதில் தொடங்கினால், 3.1 மடங்கு; 55 வயதில் தொடங்கினால், வெறும் 1.8 மடங்கு மட்டுமே அதிகரிக்கும்.
முதலீட்டை தாமதப்படுத்துவது, செல்வத்தை பெருக்கும் வாய்ப்பை குறைக்கும் என்பதை இது காட்டுகிறது. வெறும் ஐந்து ஆண்டுகள் முன்னதாக, அதாவது 25 வயதில் முதலீடு செய்வதற்கு பதிலாக 20 வயதில் முதலீடு செய்தால், 60 வயதில் கிட்டத்தட்ட இரு மடங்கு செல்வத்தை ஈட்ட முடியும். உதாரணமாக, நீங்கள் 20 வயதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அது 60 வயதில் சுமார் 93 லட்சம் ரூபாயாக வளரும். ஆனால், அதே 1 லட்சம் ரூபாயை 40 வயதில் முதலீடு செய்தால், அது வெறும் 10 லட்சம் ரூபாயாக மட்டுமே மாறும்.
இந்த வேறுபாடு, நீங்கள் எவ்வளவு முதலீடு செய்தீர்கள் என்பதல்ல; எப்போது முதலீடு செய்யத் தொடங்கினீர்கள் என்பதன் விளைவு. இதைத்தான் "கூட்டு வட்டியின் சக்தி" என்று அழைக்கிறோம். இள வயதில் சம்பளம் குறைவாக இருந்தாலும், காலப்போக்கில் அது அதிகரிக்கும். ஆரம்பத்திலேயே சிறிய தொகையுடன் தொடங்குவது, காலப்போக்கில் பெரும் செல்வமாக மாறும். இதில் முக்கியமான அம்சம், தொடர்ச்சியான முதலீடு. முதலீட்டில் மிகவும் சக்திவாய்ந்த காரணியான காலத்தை இழப்பது என்பது ஆரம்ப ஆண்டுகளைத் தவறவிடுவதாகும்.
எனவே, நீங்கள் 20 அல்லது 30 வயதுகளில் இருந்தால், செய்யக்கூடிய சிறந்த நிதி நடவடிக்கை என்பது அடுத்த பெரிய வாய்ப்பைத் தேடுவது அல்ல. அது முதலீடு செய்யத் தொடங்குவதே ஆகும். சிறிய தொகையாக இருந்தாலும், இப்போதே தொடங்கி, அதை வளரவிடுங்கள். நீண்ட காலம் முதலீடு செய்தால், உங்கள் பணம் பன்மடங்கு அதிகரிக்கும்.முதலீடு செய்ய அதிக பணம் வரும் என்று காத்திருக்க வேண்டாம். இப்போதே தொடங்கி, காலத்திற்கு உங்களுக்காக செயல்பட வாய்ப்பு கொடுங்கள். ஏனெனில், செல்வத்தை உருவாக்குவதில், காலமே எப்போதும் முக்கியமானது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications