சென்னை: நிதி ரீதியாக உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் இருந்தால், டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் வைத்திருப்பது முக்கியம். நீங்கள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் வருமானம் இல்லாமல் அவர்களின் வாழ்க்கைச் செலவுகள், கடன்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை ஈடுகட்ட சிரமப்படுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவவும், நிதி ரீதியாக ஆதரவளிக்கவும், டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் உதவுகிறது.
ஆயுள் காப்பீட்டு விதி: உங்கள் வருமானம் நின்றுவிட்டால் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? ஆயுள் காப்பீட்டு விதியானது உங்கள் தற்போதைய வருமானத்தை விட குறைந்தபட்சம் 10 மடங்கு, ஆயுள் காப்பீட்டை பரிந்துரைக்கிறது. இந்தத் தொகை உங்கள் கடன்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் இல்லாவிட்டால், உங்கள் குடும்பத்தின் அன்றாடச் செலவுகளை ஈடுகட்ட எவ்வளவு வருமானம் தேவை என்பதைத் தீர்மானிக்க இந்த விதி உதவுகிறது.

உதாரணமாக, உங்கள் வருடா வருமானம் ரூ.5 லட்சம் எனில், ரூ.5 கோடி மதிப்பிலான காப்பீடு தேவை. இதன் மூலம் உங்கள் மறைவின் போதும், உங்கள் குடும்பத்தினர் எந்தவித நிதி சிரமமும் இல்லாமல், தற்போதைய வாழ்க்கையைத் தொடர முடியும்.
உங்கள் வருமானம் காலப்போக்கில் மாறும் என்பதை நினைவில் கொள்வது அவசியம், எனவே ஒவ்வொரு ஆண்டுக்கும் உங்கள் காப்பீட்டை மதிப்பாய்வு செய்வது நல்லது. உங்கள் எதிர்பாராத மறைவின் போது உங்கள் குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.
காப்பீடு பாலிசி தேர்ந்தெடுப்பது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். இருப்பினும், காப்பீடு தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய சில காரணிகள் உள்ளன. கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் இணையதளத்தின் தகவல்படி, சிறந்த காப்பீடு பாதுகாப்பை தேர்ந்தெடுப்பதற்கான சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் பட்ஜெட்டைக் கருத்தில் கொள்ளுங்கள்: டேர்ம் இன்சூரன்ஸ் குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால், உங்கள் நிதி நிலையை பாதிக்காமல் நீங்கள் தொடர்ந்து செலுத்தக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.
ரைடர்களை கவனியுங்கள்: ரைடர்கள் என்பவை, ஊனமுற்றோர் வருமானம் அல்லது விபத்து மரணத்திற்கான வருமானம் போன்ற கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. உங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் ரைடர்களை தேர்வு செய்யுங்கள்.
வெவ்வேறு திட்டங்களை ஒப்பிடுங்கள்: டெர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கும் முதல் நிறுவனத்தின் திட்டத்தையே தேர்வு செய்து விட வேண்டாம். சிறந்த முடிவு எடுக்க, வெவ்வேறு காப்பீடு நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் அவற்றின் பிரீமியம் கட்டணங்களை ஆராய்ச்சி செய்து ஒப்பிடுங்கள்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications