சென்னை: நீண்டகால முதலீடு என வரும்போது அதற்கென பல்வேறு ஃபார்முலாக்கள் முதலீட்டு நிபுணர்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி ஒன்றுதான் 15 * 15 * 15 இந்த ஃபார்முலாவை ஒரு மேஜிக் என கூறலாம். இந்த மேஜிக் 15 ஆண்டுகளில் உங்களை கோடீஸ்வரனாக்கும் திறன் கொண்டது.
தற்போது மக்கள் மத்தியில் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும், அந்த பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இவ்வாறு முதலீடு செய்ய விரும்புபவர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றினால் 15 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பினை அடைய முடியும் . அது எப்படி என்பதை தான் தற்போது பார்க்க போகிறோம்.
இதற்கு உங்களுக்கு உதவப் போவது 15 * 15 *15 என்கிற ஃபார்முலா தான்.
அதாவது உங்களுடைய முதலீட்டை நாம் மூன்று அளவீடுகளில் பிரித்து கணக்கீடு செய்யப் போகிறோம். நீங்கள் முதலீடு செய்த பணம், முதலீட்டின் காலம் , உங்களுக்கு கிடைக்கும் ஆண்டு லாப விகிதம் . இந்த மூன்றையும் கொண்டு தான் நாம் கணக்கீடு செய்யப் போகிறோம்.
இந்த ஃபார்முலா அடிப்படையில் நீங்கள் மாதந்தோறும் 15 ,000 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய முதலீடு ஆண்டுதோறும் உங்களுக்கு 15 சதவிகிதம் லாபம் ஈட்டி தரக்கூடிய முதலீடாக இருக்க வேண்டும். இது அடுத்த 15 ஆண்டுகளுக்கு தொடரும்போது எளிதாக ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பினை உங்களால் அடைந்த விட முடியும்.
அதாவது நீங்கள் 15 ஆண்டுகளில் செய்த மொத்த முதலீட்டின் அளவு 27 லட்சம் ரூபாய், உங்களுக்கு கிடைத்த லாபம் 73 லட்சம் ரூபாய், எனவே மொத்தமாக உங்கள் கையில் கிடைக்கும் தொகை ஒரு கோடி ரூபாய். இதைத்தான் காம்பவுண்டிங் மேஜிக் என அழைக்கிறார்கள் அதாவது நீங்கள் எஸ்ஐபி உள்ளிட்ட வழிகளில் உங்களுடைய பணத்தை மாதந்தோறும் 15,000 ரூபாய் என முதலீடு செய்தால் , அந்த பணமானது காம்பவுண்டிங் முறையில் 15 ஆண்டுகளிலேயே உங்களை கோடீஸ்வரன் ஆக்கி விடுகிறது.
எனவே முதலீடு என வரும் போது காம்பவுண்டிங் முறையில் லாபம் தரக்கூடிய முதலீடுகளை தேர்வு செய்வது தான் சிறந்தது. அந்த வகையில் தற்போது மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில் பாதுகாப்பான மற்றும் எளிமையான முதலீட்டு கருவிகளாக பார்க்கப்படுகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications