மியூச்சுவல் ஃபண்ட திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட விதிகளை சரியாக பின்பற்றினால் எளிதாக கோடிகளை காண முடியும். பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்து ஏற்ற இறக்கங்களை கவனித்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க நேரம் இல்லாதவர்களுக்கு உதவியாக இருப்பவை தான் மியூச்சுவல் ஃபண்டுகள்.
இத்தகைய மியூச்சுவல் ஃபண்டில் 15-15- 30 என்ற விதியை பின்பற்றினால் எளிதாக 10 கோடி ரூபாயை சேர்த்து விட முடியும். இதன் படி ஒரு நபர், மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாயை அடுத்த 30 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 15 சதவீதம் லாபம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்.

எனவே தான் இளம் வயதிலேயே முதலீடு செய்ய தொடங்கி விட்டால் வேலை செய்யும் காலம் அதிகமாக இருக்கும் என்பதால் முதலீட்டுக்கான காலமும் அதிகமாக இருக்கும் எனவே பெரிய அளவிலான லாபம் கிடைக்கும் என்கிறார் ஃபின்வைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜெய் ஷா.
இவ்வாறு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 15 சதவீதம் லாபம் தரும் ஒரு முதலீட்டு நிதியில் 30 ஆண்டுகள் முதலீடு செய்தால் 10 கோடி ரூபாய் கிடைக்கும் என அவர் கூறுகிறார். ஒருவேளை மாதத்திற்கு 1.5 லட்சம் முதலீடு செய்ய முடியும் என வைத்துக் கொண்டால் , இந்த 30 ஆண்டுகளில் ஒரு நபரால் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் மட்டுமே 100 கோடி ரூபாயை லாபமாக பெற முடியும்.
மாதத்திற்கு 60 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய முடியும் என்றால் இந்த 30 ஆண்டுகளில் 40 கோடி ரூபாயை லாபமாக பெற முடியும் எனக் கூறுகிறார். ஒரு முதலீட்டாளர் 1 கோடி ரூபாயை தன்னுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் பெற வேண்டும் என நினைத்தால் 15- 15- 15 என்ற விதியை பின்பற்ற வேண்டும்.
மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 15 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் கிடைக்கும். இதன்படி ஒருவர் செய்த முதலீட்டுத் தொகை 27 லட்சம் ரூபாயாக இருக்கும் அதுவே அவருக்கு கிடைத்த லாபம் 74 லட்சமாக இருக்கும். 15 ஆண்டுகாலம் முடியும்போது 1 கோடி ரூபாயை பெற முடியும் என ஜெய் ஷா விளக்கம் தருகிறார்.
ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை தவறாமல் முதலீட்டை தொடர் வேண்டும், இல்லையெனில் நினைத்த லாபத்தை எட்ட முடியாது. சரியான ஃபண்டை தேர்வு செய்து , ஒழுக்கமான முறையில் முதலீடு செய்தால் லாபம் நிச்சயம் என்கிறார்.
Written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications