மியூச்சுவல் ஃபண்டில் நிலையான மாதாந்திர முதலீட்டு திட்டம் (SIP) மூலம் ரூ. 1 கோடி திரட்டுவது என்பது ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் மிகப்பெரிய இலக்காகும். ஆனால், பெரும்பாலானோர் கவனிக்காத ஒரு உண்மை என்னவென்றால், இந்த முதல் ரூ. 1 கோடியை சேர்ப்பதுதான் மிகவும் சவாலானது. ஒருமுறை நீங்கள் இந்த கோட்டை தொட்டுவிட்டால், அதன் பிறகு வரும் அடுத்தடுத்த கோடிகளை சேர்ப்பதற்கு குறைவான காலமே போதுமானதாக இருக்கும். நீண்ட கால எஸ்ஐபி முதலீடுகளில், தொடக்கத்தை விட பிற்காலத்தில்தான் உங்கள் பணம் மிகப் பெரிய அளவில் பெருகும். இதற்குக் காரணம், கூட்டு வட்டியின் (Compounding) மகத்தான சக்தியாகும்.
ஆரம்பத்தில் பொறுமை தேவை : மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி செய்யும் முதலீட்டாளர்கள், தொடக்க வருடங்களில் வரும் லாபத்தை பார்த்து விரக்தியடையாமல், பொறுமையை கடைப்பிடிப்பதே மிகவும் அவசியம். ஏனெனில், கூட்டு வட்டி செயல்பட தொடங்க, அதற்கு சிறிது காலம் தேவைப்படும்.

நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் தொகைக்கு வரும் லாபம், மீண்டும் முதலீடாக சேர்ந்துவிடும். காலப்போக்கில், அந்த லாபமும் சேர்த்து லாபத்தை ஈட்ட ஆரம்பிக்கும்போது, அது பெரிதாகி கொண்டே போகும். இதுதான் கூட்டு வட்டி என்று நிதி ஆலோசகரான போரம் நாயக் ஷேத் விளக்கியுள்ளார்.
உதாரணமாக, மாதத்திற்கு ரூ. 10,000 முதலீடு செய்து 12% லாபம் கிடைத்தால், 10 ஆண்டுகளில் ரூ. 23 லட்சம்தான் கிடைக்கும். ஆனால், 20 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ரூ. 92 லட்சம் வந்து சேரும்.
முதலில் ஒரு கோடி சம்பாதிப்பது கடினம் : ரூ. 1 லட்சம் மாத எஸ்ஐபி முதலீட்டிலேயே (12% லாபத்தில்), முதல் ரூ. 1.04 கோடியைச் சேர்க்க 6 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த இலக்கை அடைந்த பிறகு, அதன் பிறகு வரும் ரூ. 4 கோடிக்கும் மேலான தொகையை சேர்ப்பதற்கு கூடுதல் 10 ஆண்டுகளே போதுமானதாக உள்ளது (மொத்தம் 16 ஆண்டுகள்). இதற்குக் காரணம், முதல் கோடியை சேர்ப்பது வரை, உங்களது முதலீடு மட்டுமே பெரிய பங்களிப்பை செய்திருக்கும். அதற்குப் பிறகு, நீங்கள் முதலீடு செய்த தொகையும், அதன் மூலம் கிடைத்த லாபமும் இணைந்து உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை ஈட்டி தருகின்றன.
பல முதலீட்டாளர்கள், 7 அல்லது 8-வது ஆண்டில் வளர்ச்சி மெதுவாக இருப்பதாக நினைத்து எஸ்ஐபியை நிறுத்தி விடுகின்றனர். ஆனால், எஸ்ஐபி-இன் அற்புதம் பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் நடக்கும்" என்று நிபுணர் நேஹல் மோட்டா கூறுகிறார்.
குறைந்த முதலீட்டிலும் இலக்கை அடையலாம் :மாதம் ரூ. 1 லட்சம் சேமிக்க முடியாதவர்கள் கூட, ரூ. 5 கோடி இலக்கை அடைய முடியும். உதாரணமாக, மாதம் ரூ. 30,000 முதலீடு செய்பவர், 12% லாபத்தில் 25 ஆண்டுகளில் ரூ. 5 கோடியை தொடலாம். இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முதல் ரூ. 1 கோடி சேர 13 ஆண்டுகள் ஆகும். ஆனால் மீதமுள்ள ரூ. 4 கோடி வெறும் 12 ஆண்டுகளிலேயே சேர்ந்துவிடும். மேலும், சம்பளம் உயரும்போது முதலீட்டுத் தொகையை ஆண்டுதோறும் 7% அதிகரித்தால் அதே ரூ. 5 கோடி இலக்கை 4 ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 21 ஆண்டுகளிலேயே எட்டிவிட முடியும்.
சிறிய லாபம் கூட மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் : நீண்ட கால முதலீட்டில், வருமான விகிதத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட உங்கள் செல்வத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, மாத முதலீடு ரூ. 30,000-க்கு 12%-க்குப் பதிலாக 14% லாபம் கிடைத்தால், ரூ. 5 கோடி இலக்கை 25 ஆண்டுகளுக்குப் பதிலாக 23 ஆண்டுகளிலேயே அடைய முடியும். வெறும் 2% கூடுதல் லாபம், பல லட்ச ரூபாய் கூடுதல் செல்வத்தை ஈட்டித் தரும். எனவே, சந்தை ஏற்ற இறக்கங்களை பார்க்காமல், நீண்ட காலம் முதலீட்டில் நீடிப்பதே கோடீஸ்வரர் ஆவதற்கான ரகசியம்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications