மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது இலாபகரமாக என்றும் அதிக வருவாய் தரக் கூடியது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் 3 ஆண்டுகளில் மாதம் ரூபாய் 10,000 மட்டும் முதலீடு செய்தால் ரூபாய் 9 லட்சம் கிடைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்த தகவல் கிடைத்துள்ளது
அந்த திட்டம் எது? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை தற்போது பார்ப்போம்
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருவாயை வழங்கும் சிறந்த முதலீட்டு வகைகளில் ஒன்று என்பதை பார்த்து வருகிறோம். ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட கால நோக்கங்களுக்காக சிறந்தவை என்று கூறுவது ஏனென்றால் அவை பங்குச்சந்தைகளின் ஏற்ற இறக்கத்துடன் பயணம் செய்து நீண்ட காலத்திற்கு வருவாயை அதிகம் கொடுக்கும் திறனை கொண்டுள்ளன.
5 நட்சத்திர மதிப்பீடு திட்டம்
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் போது முதலீட்டாளரின் முதலீட்டு நோக்கம், ரிஸ்க், காலக்கெடு, இலக்கு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு எஸ்ஐபியை தொடங்குவதை எளிதாக்குகின்றன. இந்த நிலையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை கொண்ட இரண்டு ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதாந்தோறும் ரூ.10,000க்கு முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் ரூ.9 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்பதை தற்போது பார்ப்போம்.
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் - நேரடி திட்டம்
கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் நேரடி திட்டம் என்ற திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டின் என்ஏவி ரூ.26.17 ஆக இருந்தது. கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் டைரக்ட் திட்டத்தின் கடந்த ஆண்டு வளர்ச்சி வருமானம் 12.70% ஆக உள்ளது. மேலும் இதில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 29.68% வருமானத்தை கொடுத்துள்ளது.
3 ஆண்டுகளில் ரூ.9 லட்சம்
கனரா ரோபிகோ ஸ்மால் கேப் ஃபண்ட் டைரக்ட் - க்ரோத் திட்டம் 3 ஆண்டுகள் மாதம் ரூ.10,000 SIP முறையில் முதலீடு செய்தால் அதாவது மூன்று ஆண்டுகளில் ரூ.3.60 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.9.22 லட்சம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபண்ட் மேனேஜர்கள்
சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், ஷேஃப்லர் இந்தியா லிமிடெட், செரா சானிட்டரிவேர் லிமிடெட், இந்தியன் ஹோட்டல்ஸ் கோ. லிமிடெட், மற்றும் செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவைகளில் இந்த திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர்கள் முதலீடு செய்துள்ளனர்.
குவாண்ட் வரி திட்டம் - நேரடித் திட்டம்
குவாண்ட் வரி திட்டம் - நேரடித் திட்டம் என்பது ELSS மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆகும். இந்த திட்டம் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2022ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியின்படி இந்த ஃபண்டின் என்ஏவி ரூ.267.6 ஆக இருந்தது. இந்த திட்டம் ஆண்டுக்கு சராசரியாக 21.64% வருமானம் கொடுத்துள்ளது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10,000 எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் ₹9.38 லட்சம் வருமானம் கிடைத்திருக்கும்.
முதலீடு
அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications