நடப்பு நிதியாண்டு இன்னும் சில வாரங்களில் முடியவடைய போகிறது. கூடவே அடுத்த நிதியாண்டில் பல புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஏப்ரலில் இருந்து வருமான வரியில் வரவிருக்கும் மாற்றங்கள் தான்.
ஆக வரவிருக்கும் புதிய விதிகளினால் யாருக்கு என்ன பலம்? யாருக்கு பாதிப்பு என்பதை பற்றித் தான் இன்று பார்க்கவிருக்கிறோம்.
இதனை உறுதி படுத்திக்கொள்ளுங்கள்
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் போது சம்பள வருமானம், வங்கி கணக்கு, வரி செலுத்திய தகவல், டிடிஎஸ் விபரம் ஆகியவை முன்கூட்டியே பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது மூலதன ஆதாயங்கள், டிவிடெண்ட் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி வருமானம், போஸ்ட் ஆபீஸ்-ல் இருந்து கிடைத்த வருமானம் ஆகியவற்றையும் நேரடியாக வருமான வரி அறிக்கையில் சேர்க்கப்படும். ஆக அவற்றை துல்லியமாக இருப்பதை வருமான வரி செலுத்துவோர் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இனி முன் கூட்டியே செய்ய தேவையில்லை
ஆக வருமான வரி செலுத்துவோர் இனி முன்கூட்டிய வரி செலுத்தும் போது அவர்களுக்கு, கிடைக்கும் ஈவுத்தொகை (Dividend) வருமானத்தை முன்கூட்டியே கணக்கிட்டு வரி செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் பணத்தை அரசுக்குச் செலுத்துவதைத் தடுக்க முடியும்.
வருங்கால வைப்பு நிதி- வரி மாற்றங்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்தான வரியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கும் வரி விகிதம் உண்டு. பொதுவாக இந்த திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆக சம்பளதாரர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம். ஒரு வேளை நீங்கள் அதிக தொகையை செலுத்த விரும்பினால், அதற்காக வரியையும் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ITR செய்ய தேவையில்லை
மூத்த குடிமக்கள், அதாவது 75 வயது அல்லது அதற்கு அதிகமாக வயதுடைய மூத்த குடிமக்கள், பென்ஷன் மற்றும் வங்கி வட்டி வருமானம் மட்டுமே வருடாந்திர வருமானமாக இருக்கும்பட்சத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. எனினும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் மற்ற ஏதேனும் ஒரு வகையில் வருமானம் ஈட்டும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது.
டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ்
வருமான வரி தாக்கலை அதிகரிக்க பட்ஜெட்டில் டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் ஆகியவற்றை பற்றி நிதியமைச்சர் அறிவித்தார். இது ஏப்ரல் 1,2021 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதியதாக வருமான வரி சட்டத்தில் 206AB மற்றும் 206CCA என்ற புதிய பிரிவுகள் அமலுக்கு வரவுள்ளன. இதன் படி வருமான வரி தாக்கல் செய்யாத நபர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 50,000 ரூபாய் டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் (TCS) விலக்கு பெற்றிருந்தால், டிடிஎஸ்(TDS) அல்லது டிசிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
விடுமுறை பயண சலுகை (LTC cash voucher scheme)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நெருக்கடியான இந்த நேரத்தில் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அரசு ஊழியர்களுக்கான எல்டிசி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.
ஊழியர்களின் பதவிக்கு ஏற்ப இந்த பயண கட்டணம் தரப்படும். இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், இந்த பயண கட்டணத்திற்கான கொடுப்பனவிற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு என்பது தான். இந்த தொகையினை மார்ச் 31, 2021-க்கு முன் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழியர்கள் இந்த தொகையை ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையை பெற செலவழிக்க வேண்டும் என்பது தான். இந்த திட்டமானது மார்ச் 31வுடன் முடிவடையவுள்ளது. ஆக ஊழியர்களை இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் கொஞ்சம் கவனியுங்கள்
2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வருமான வரி மற்றும் வரிப் பலகையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கவில்லை. எனினும் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் புதிய வரி கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்தது. இருப்பினும் 2021 - 22ம் ஆண்டில் எந்த வருமான வரி திட்டத்தினை தேர்தெடுப்பது என்பதனை தீர்மானிக்க வேண்டூம். இது ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டு தொடங்கவுள்ளதால், அதனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம்.


Click it and Unblock the Notifications