இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.10,000 எஸ்ஐபி செய்தவர்கள் எல்லாம் இன்னைக்கு லட்சாதிபதி!!

இந்தியாவில் பாரம்பரியமான பிக்சட் டெபாசிட் ,ஆர்டி உள்ளிட்ட முதலீடு திட்டங்களில் இருந்து மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் , பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றை நோக்கி நகர்ந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்களுக்கு மிகவும் சௌகரியமான ஒரு முதலீடாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பார்க்கப்படுகின்றன.

நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களிடம் முதலீடு செய்வார்கள். மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் அந்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும். அந்த வகையில் இந்தியாவில் லார்ஜ் கேப், ஸ்மால் கேப், மிட் கேப் என ஒவ்வொரு பிரிவுகளாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருக்கின்றன. இதில் நீண்ட கால அடிப்படையில் எஸ்ஐபி முறையில் நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ச்சியாக முதலீடு செய்தால் முதலீடு செய்த தொகையை விட பல மடங்கு அதிகமான தொகை நமக்கு வருமானமாக கிடைக்கும்.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.10,000 எஸ்ஐபி செய்தவர்கள் எல்லாம் இன்னைக்கு லட்சாதிபதி!!

இதற்கு உதாரணமாக கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு மிகச்சிறந்த லாபத்தை தந்த ஆறு லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். அதிக சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இவை. வேல்யூ ரிசர்ச் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி நாம் தற்போது பார்க்கக்கூடிய இந்த ஆறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கடந்த 10 ஆண்டுகளில் மாதந்தோறும் 10 ,000 ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு 16 சதவீததுக்குக் அதிகமான ஆண்டு லாபத்தை தந்திருக்கின்றன.

அதாவது 10 ஆண்டுகளில் இவர்கள் செய்த மொத்த முதலீடு 12 லட்சம் ரூபாய் இவர்களுக்கு திரும்ப கையில் கிடைத்திருக்கும் பணம் 27 முதல் 30 லட்சம் ரூபாய் ஆகும். முதலீடு செய்ததை விட இரண்டு மடங்கு அதிகமான பணம் கிடைத்திருக்கிறது.

1.நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட் (Nippon India Large Cap Fund (Direct Plan)) :

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 17.83 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.67 சதவீதம் தான். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் சுமார் 30 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

2.ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் ப்ளூசிப் ஃபண்ட் (ICICI Prudential Bluechip Fund (Direct Plan) ):

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 17.03 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.85 சதவீதம் . இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் 29 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

3.கனரா ரொபெகோ ப்ளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் (Canara Robeco Bluechip Equity Fund (Direct Plan) ):

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 16.91 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.46 சதவீதம் . இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் 29 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

4.இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் (Invesco India Largecap Fund (Direct Plan) ):

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 16.38 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.75 சதவீதம் . இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் 28 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

5.பரோடா பிஎன்பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் (Baroda BNP Paribas Large Cap Fund (Direct Plan) ):

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 16.17 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.77 சதவீதம் . இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் 28 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

6.ஈடெல்வீசஸ் லார்ஜ் கேப் ஃபண்ட் (Edelweiss Large Cap Fund (Direct Plan)):

இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளில் 16.07 சதவீத லாபம் தந்துள்ளது. இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ 0.62 சதவீதம் . இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்தவர்கள் 27 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர்.

இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் பெரும்பாலும் வங்கி, ஐடி துறை, மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நாட்டின் பிரதானமான துறைகளில் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளில் தான் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன. ஹெசிஎஃப்சி, ஐசிஐசிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி, எல்&டி உள்ளிட்ட லார்ஜ் கேப் நிறுவனங்களில் இவை அதிகமான முதலீடு செய்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவில் லாபத்தை ஈட்டி தந்துள்ளன. ரிசர்ச் வேல்யூ வெளியிட்ட தகவலின் படி மட்டுமே இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் முதலீட்டு ஆலோசகரின் அறிவுரைப்படி முதலீட்டை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+