இந்தியாவில் தற்போது எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் செய்யப்படக்கூடிய முதலீடுகள் சிறந்தவை என்பதை நிரூபிக்கும் வகையிலான ஒரு புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பெஞ்ச் மார்க் குறியீடான நிப்டி 50 இண்டெக்ஸ் ஃபண்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தந்த லாபத்தை விட குறிப்பிட்ட சில மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக லாபத்தை தந்திருப்பது தெரிய வந்துள்ளது.

நிஃப்டி 50 குறியீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட எஸ்ஐபி முதலீடுகள் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 21.3 சதவீதம் லாபம் தந்துள்ளன. ஆனால் துறை ரீதியான ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் மற்றும் மிட் கேப் ஃபண்டுகள் 45 % லாபத்தை தந்திருப்பது எக்னாமிக் டைம்ஸ் செய்தியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடு செய்யக்கூடிய தீமேட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள் கணிசமான லாபத்தை தந்துள்ளன.
ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் குவாண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 47.13 சதவீத லாபத்தை தந்துள்ளது. அதேபோல மிட்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் மோதிலால் ஒஸ்வாள் மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் 50.17 சதவீத லாபத்தை தந்துள்ளது. செக்டார் ஃபண்டுகளில் நிப்பான் இந்தியா பவர் ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் 60.09 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. தீமேட்டிக் ஃபண்டுகளில் இன்வெஸ்கோ இந்தியா பிஎஸ்யு ஃபண்ட் 65.03 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.
இதேபோல பல்வேறு ஸ்மால் கேப் பண்டுகளும் 45 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தையும், மிட் கேப் ஃபண்டுகள் 40 சதவீதத்துக்கு அதிகமான லாபத்தையும் பெற்று தந்துள்ளன. செக்டார் பங்குகள் 55 சதவீதத்திற்கும் அதிகமான லாபங்களை பெற்று தந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல தீமேட்டிக் ஃபண்டுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் லாபத்தை தந்திருப்பது தெரியவந்துள்ளது.
அண்மையில் வெளியான ஒரு தகவலின் படி முதலீட்டாளர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை குறைத்து தங்களது முதலீடுகளை பரவலாக்கி வருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் ஃபண்டுகளில் அதிகபட்ச முதலீடுகள் செய்யப்படுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை கடந்த கால வருமானங்களை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய கூடாது என கூறும் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர்கள் தீமேட்டீக் ஃபண்டுகள் , ஸ்மால் கேப் உள்ளிட்டவை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications