முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 8 திட்டங்கள்.. வங்கி வட்டியை விட அதிகம் தரும் அஞ்சலக திட்டங்கள்..!

அஞ்சலகத்தில் முதலீடு செய்வது என்பது மிக இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பான திட்டமாக மட்டும் அல்ல, நல்ல லாபகரமான திட்டமாகவும் உள்ளது. ஏனெனில் வங்கி வட்டியை விட அஞ்சலக திட்டங்களில் வட்டி விகிதம் அதிகம்.

அப்படிப்பட்ட அஞ்சலக திட்டங்களில் எந்த திட்டத்தில் வட்டி அதிகம். எந்த திட்டத்தில் உங்கள் முதலீடு விரைவில் இருமடங்காக அதிகரிக்கும் என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் வட்டி அதிகம், பாதுகாப்பானது, சந்தை அபாயம் இல்லை. வரிசலுகை, இன்னும் பல வகையிலும் ஏற்றதாக உள்ளது.

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் அக்கவுண்ட்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் அக்கவுண்ட்

அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டுகள் திட்டத்தில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. இதில் 5 வருட டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் 6.7%ம் ஆகும். இதில் 10.75 ஆண்டுகளில் உங்களது இருமடங்காக அதிகரிக்கும்.

இதே மற்ற திட்டங்களில் 5.5% வட்டி விகிதம் ஆகும். இது 13 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருமடங்காக அதிகரிக்கும்.

அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு

அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்கு

அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கு போன்றது. வங்கி கணக்கில் பெறும் பெரும்பாலான சேவைகளை நாம் இந்த அஞ்சல கணக்கிலும் பெற முடியும்.

இந்த கணக்கின் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு 4% வட்டி கொடுக்கப்படுகிறது.
இந்த கணக்கில் செய்யப்படும் முதலீடு 18 ஆண்டுகளில் உங்களது தொகை இரட்டிப்பாகிறது.

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி

அஞ்சலத்தில் உள்ள தொடர்ச்சியான வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.8% வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 12.41 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காகிறது.
இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இது மாத மாதம் சிறு தொகையை சேமிக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகும்.

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும்.
இந்த திட்டத்தில் மாத மாதம் எனக்கு ஒரு வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.
குறிப்பாக மூத்த குடி மகக்ளுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டம்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு ஏற்ற திட்டம். இது 15 ஆண்டுகால திட்டமாகும்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இதில் 10.14 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.

சுகன்யா சமிரிதி யோஜனா

சுகன்யா சமிரிதி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டது.

குறிப்பாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இந்த திட்டத்தில் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 9.47 மாதங்களில் இரு மடங்காக மாறும்.
இந்த திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS), 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும்.

இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
இந்த SCSS திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.4% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 9.73 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.

தேசிய சேமிப்பு பத்திரம்

தேசிய சேமிப்பு பத்திரம்

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 10.59 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.
இந்த திட்டத்தில் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகையும் பெறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+