பொதுவாக வங்கி பிக்சட் டெபாசிட் என்பதே மிக பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகின்றது. அதுவும் பொதுத் துறை வங்கி எனும்போது அது இன்னும் ஒரு பங்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்குஇ என பலவும் அடங்கும்.
இந்த வங்கிகளில் முதலீட்டு காலத்திற்கு ஏற்ப பிக்சட் டெபாசிட் செய்யப்படும் திட்டங்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் இருக்கும்.
கனரா வங்கி
கனரா வங்கியில் வட்டி விகிதம் 3.25%ல் இருந்து வருடத்திற்கு 7% வரையில் வழங்கப்படுகின்றது. இது 7 முதல் 45 நாட்களுக்கான வட்டி விகிதம் 3.25% ஆகவும், 46 - 90 நாட்களுக்கு 4.50% வட்டி விகிதத்தினையும், 91 - 179 நாட்களுக்கான வட்டி விகிதமும் 4.50% வழங்கப்படுகின்றது. இதே 666 நாட்கள் திட்டத்திற்கு 7% வட்டியும் வழங்கப்படுகின்றது. இதில் 3 வருடம் முதல் 10 வருடம் வரையிலான திட்டத்திற்கு 6.5% வட்டியும், 2 - 3 வருட திட்டத்திற்கு 6.80%மும் வழங்கப்படுகின்றது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஜனவரி 1, 2023 ம்ஜ்தல் இந்த வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதில் 7 - 45 நாட்கள் வரையிலான திட்டங்களுக்கு 3.50%மும், 46 - 179 நாட்களுக்கு 4.50% வட்டியும், 180 - 279 நாட்களுக்கு 5.50% வட்டியும், 1 வருட திட்டம் மற்றும் 1 வருடம் முதல் 665 நாட்களுக்கு 6.75%மும், 666 நாட்களுக்கு 7.25% வட்டியினையும், 667 நாட்கள் முதல் 3 வருட வரையில் 6.75% வட்டியும், 3 - 10 வருட திட்டங்களுக்கு 6.50% வட்டியும் கிடைக்கிறது.
பாங்க் ஆப் பரோடா
பாங்கு ஆப் பரோடா கடந்த டிசம்பர் 2022 முதல் வட்டி விகிதம் செய்யப்பட்டது. இதில் 7 - 45 நாட்கள் வரையிலான திட்டங்களுக்கு 3%மும், 46 - 180 நாட்களுக்கு 4.50% வட்டியும், 181 - 210 நாட்களுக்கு 5.25% வட்டியும், 211 நாள் முதல் 1 வருடம் வரையில் 6.75% வட்டியும், 1 வருட திட்டத்திற்கு - 6.75% வட்டியும், 1 வருடம் முதல் 3 வருட வரையில் 6.75% வட்டியும், 3 - 10 வருட திட்டங்களுக்கு 6.25% வட்டியும் கிடைக்கிறது. இதில் 399 நாட்கள் கொண்ட சிறப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.05% வட்டியும் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் திட்டம்
மேற்கண்ட திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு இன்னும் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் கிடைக்கும் எனலாம். ஆக மூத்த குடி மக்களுக்கு கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications