மும்பை: இந்தி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் ராம் கபூர். இவர் நடித்த நாடகங்கள் தமிழில் கூட டப் செய்து வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஸ்மார்ட்டான முதலீட்டு யுக்திகள் மூலம் நான்கு தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஒரு பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பதில் அளித்து இருக்கிறார்.
பொதுவாகவே பாலிவுட் உலக நட்சத்திரங்கள் திரையில் நடிப்பதால் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துடன் நிறுத்திவிடுவது கிடையாது. ரியல் எஸ்டேட், படம் தயாரிப்பது, பேஷன் பொருட்களை விற்பது என முதலீட்டிலும் கவனம் செலுத்துகின்றனர். நான் என்னுடைய பணத்தை சரியான முறையில் முதலீடு செய்வேன் என கூறும் ராம் கபூர் தனது தந்தையே தனக்கு நிதி சார்ந்த ஒழுக்கத்தை கற்றுத்தந்தார் அதை பின்பற்றி தான் நான் இந்த அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை என்னுடைய தந்தை சிறுவயதிலேயே எனக்கு கற்றுத் தந்து விட்டார் என கூறியிருக்கும் ராம் கபூர் தொடக்கத்தில் நான் திரைத்துறையில் கால் பதித்த போது வருமானத்திற்காக எதிர்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பதற்காக நடித்தேன் , நான் நிர்ணயித்த வருமானத்தை எட்டிய பிறகு நான் தற்போது பணத்திற்காக நடிக்கவில்லை என்னுடைய விருப்பத்திற்காக மட்டுமே நடிக்கிறேன் என கூறியிருக்கிறார்.
பணம் சம்பாதிப்பது மட்டுமே முக்கியம் கிடையாது அந்த பணத்தை கொண்டு எப்படி ஒரு சிறந்த செல்வத்தை உருவாக்குகிறோம் என்பது தான் முக்கியம் என அவர் கூறியிருக்கிறார். வங்கிக்கணக்கில் நாம் நம் பணத்தை வெறுமனே வைத்திருப்பதனால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை அந்த பணத்திற்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை எனக் கூறும் அவர் பல்வேறு பிரிவுகளில் நாம் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்.
நன்கு வளர்ச்சி அடையக்கூடிய இடங்களில் சொத்துக்களை வாங்க வேண்டும் அதுவே சிறந்த முதலீடு என அறிவுரை வழங்குகிறார் . தற்போது இவர் துபாய் மற்றும் சர்வதேச நாடுகளில் எல்லாம் சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதாக கூறுகிறார். நமக்கு நிதி சார்ந்த ஒழுக்கம் இருக்க வேண்டும் ஒரு சிறந்த நிதி ஆலோசகரை நம் வழிகாட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார். இந்த இரண்டும் ஒரு சேர இருந்தால் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் உங்களுடைய பணம் இரண்டு மடங்காக உயரும் என அவர் கூறுகிறார். ராம் கபூர் 100 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications