பொறுத்தார் பூமி ஆள்வார் என சொல்லப்படுவது உண்டு. இது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ எஸ் ஐ பி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும். இப்போதெல்லாம் முதலீடு செய்பவர்கள் உடனடியாக எனக்கு அதில் லாபம் வேண்டும் என பார்க்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டுகளோ , பங்குச்சந்தைகளோ நான் பணத்தை முதலீடு செய்து விட்டேன் எனக்கு உடனே லாபமே வர வேண்டும் என எதிர்பார்க்க கூடாது.
எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது குறிப்பிட்ட சில காலம் காத்திருக்க வேண்டும் அவ்வாறு காத்திருந்தால் அந்த காத்திருத்தலுக்கான பலனை நீங்கள் நிச்சயம் அறுவடை செய்தீர்கள். அதற்கு உதாரணமான ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை நாம் தற்போது பார்க்க போகிறோம். இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி தங்களின் ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டம் இந்த 32 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு எத்தனை கோடி லாபம் ஈட்டி தந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 1994 ஆம் ஆண்டு முதன் முதலில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் hdfc balanced advantage fund என்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல், மாதந்தோறும் 10000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்தவர்கள் அனைவருமே கடந்த ஜனவரி மாதத்தில் 16 கோடியாக திரும்ப பெற்றிருக்கிறார்களாம். 38 லட்சத்தை முதலீடு செய்து 16 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஒவ்வொரு ஆண்டும் 18. 40 சதவீதம் என்ற காம்பவுண்டிங் வளர்ச்சியை தந்திருக்கிறது.
1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா பெருந்தொற்று , 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என பல்வேறு சந்தை ஏற்ற இறக்கங்களை எல்லாம் இந்த மியூச்சுவல் ஃபண்டு சந்தித்து இருக்கிறது. ஆனால் அதற்கு பயந்து சந்தையில் இருந்து பணத்தை எடுக்காமல் தொடர்ச்சியாக முதலீடு செய்தவர்கள் தற்போது அதன் பலனை அனுபவிக்கின்றனர்.
இதில் மாதம் 1000 ரூபாய் எஸ்ஐபி செய்திருந்தால் கூட இப்போது 1 கோடி ரூபாயாக திரும்ப கிடைத்திருக்கும். பொதுவாகவே ஒரு முதலீடு என நாம் களம் இறங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அது வளர்ச்சி அடைவதற்கு விட வேண்டும் பணத்தைப் போட்ட ஓராண்டிலேயே ஐயோ பங்குச்சந்தை விழுந்துவிட்டது என்னுடைய பணம் அவ்வளவுதான் என பயந்து போய் அவசர அவசரமாக பணத்தை நஷ்டத்தோடு எடுக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
இந்தியா போன்ற ஒரு வளர்ச்சி அடைய கூடிய பொருளாதார நாட்டில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை கவனிக்காமல் ஒழுக்கமான முறையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும், அது நிச்சயம் பலனை தரும் என்பதற்கு இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் வெற்றியே ஒரு உதாரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications