முதலீடுகள் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக உள்ள நிலையில், அதிக வட்டி, அதனை விட பாதுகாப்பான முதலீடுகளில் மக்களின் ஆர்வம் என்பது அதிகரித்துள்ளது.
பொதுவாக முதலீடு என்றாலே வங்கி வைப்பு நிதி என்ற காலம் போய் இன்று ஏராளமான திட்டங்கள் உள்ளன.
குறிப்பாக அஞ்சல் துறையே பல முதலீட்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் வங்கி வைப்பு நிதிகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதத்தினை, அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் எனலாம்.
எஸ்பிஐ எஃப்டி Vs KVP
எஸ்பிஐ சமீபத்தில் தான் தனது வைப்பு நிதிகளுக்கு 80 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டி விகிதத்தினை அதிகரித்தது. இதன் மூலம் பொது மக்களுக்கு 6.25% வரையில் வட்டி விகிதமும், அதிகபட்சமாக 5 - 10 ஆண்டுகளுக்கு 6.90%மும் வழங்கப்படுகின்றது. இதில் வட்டி குறைவு தான் என்றாலும் நிரந்தர வருமானம் தரும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
இதனுடன் ஒப்பிடும்போது அஞ்சலத்தில் கிசான் விகாஸ் பத்திரத்திற்கு வட்டி அதிகமாகும். இது முதலீட்டாளர்களின் முதலீட்டினை இருமடங்காக மாற்றுவதோடு, வட்டி விகிதமும் எஸ்பிஐ விட அதிகமாகும்.
இருமடங்கு
கிசான் விகாஸ் பத்திரம் நிரந்தர வருமானம் தரக்கூடிய நீண்டகால திட்டமாகும். இது சந்தை அபாயம் இல்லாத ஒரு பாதுகாப்பான திட்டமாகும். இதில் பங்கு சந்தையை விட வருமானம் குறைவு என்றாலும், ரிஸ்க் இல்லா ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையானது 123 மாதங்களில் இருமடங்காக அதிகரிக்கும் (10 வருடம் 3 மாதங்கள்).
அதிகபட்ச முதலீடு?
இந்த திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.9% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை அஞ்சலகங்களில் தனியாகவோ அல்லது இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம். இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதன் பிறகு 100ன் மடங்கில் முதலீடு செய்யலாம். இதில் அதிக பட்ச வரம்பு என எதுவும் கிடையாது.
நாமினி வசதி
இந்த திட்டத்தில் நீங்கள் இணையும்போது கிடைக்கும் வட்டியே, இறுதி வரையிலும் கிடைக்கும். கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து சேமிப்பைத் துவங்கலாம். பாஸ்புக் வசதியும் உண்டு. இந்த திட்டத்தில் விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில் மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.
வேறு பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்
முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு. முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த சேமிப்பு திட்டத்தினை வைத்து கடன் பெற முடியும். எனினும் வரி சலுகை கிடையாது.
வட்டி அதிகரிக்கலாம்
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இணைந்த பிறகு, அஞ்சலகத்தில் இருந்து பாஸ்புக்கினையும் பெற்றுக் கொள்ளலாம். இதில் மற்ற விவரங்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் வங்கி வைப்பு நிதியினை விட அதிகம். அதோடு தொடர்ந்து பல காலாண்டுகளாக வட்டி விகிதம் என்பது அஞ்சலக திட்டங்களுக்கு உயர்த்தப்படாமலேயே இருந்து வருகின்றது. இது உயர்த்தப்படும்போது, இனி இணையும் பயனர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக அமையலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications